உலகம் செய்தி

அழுத்தங்களுக்கு பணிந்து போரில் பங்கேற்கோம்: பிரிட்டன் திட்டவட்டம்!

ஈரான்மீதான போரில் பிரிட்டன் இணைய வேண்டும் என்ற அழுத்தங்களுக்கு தாம் அடிபணியப்போவதில்லை என பிரதமர் Keir Starmer திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தம் எந்நேரத்தில் வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ள பின்னணியிலேயே பிரிட்டன் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

போரில் இணைவது தங்களது தேசிய நலனுக்கு எதிரானது என்றும் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் Keir Starmer குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டுத் தலைவர்களின் கருத்துக்கள் அல்லது அரசியல் நெருக்கடிகளுக்கு அடிபணிந்து நாட்டின் வெளியுறவுக் கொள்கையை மாற்றிக்கொள்ளப் போவதில்லை எனவும் அவர் சூளுரைத்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!