தையிட்டியில் அடுத்தது என்ன? யாழில் விசேட கூட்டம்!
யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் நிலங்களை மீட்டெடுப்பதற்கான எதிர்காலச் செயற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று புதன்கிழமை பிற்பகல் யாழ். தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது. “தையிட்டியில் அடுத்தது என்ன?” எனும் தலைப்பில் ‘தையிட்டி ஆக்கிரமிப்பு விகாரையால் நிலமிழந்த தமிழர்கள்’ அமைப்பின் ஏற்பாட்டில் இச்சந்திப்பு முன்னெடுக்கப்பட்டது. தையிட்டி நிலங்களை அளவீடு செய்து விடுவிப்பதாக அமைச்சர் இ.சந்திரசேகர் அண்மையில் அறிவித்திருந்த போதிலும், அங்கு சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின் நிலைப்பாடு குறித்துத் தெளிவான அறிவிப்புகள் எதுவும் […]













