ஈரானில் களமிறங்கினார் பாகிஸ்தான் ராணுவ தளபதி!
பாகிஸ்தானின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று ஈரானுக்கு அவசர பயணம் மேற்கொண்டுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் அமைதி பேச்சுகளை முன்னெடுப்பதற்கு பாகிஸ்தான் மத்தியஸ்தம் வகிக்கின்றது.
இஸ்லாமாபாத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதல் சுற்று பேச்சு தோல்வி அடைந்த நிலையில், மீண்டும் பேச்சை தொடர்வதற்குரிய முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது.
இதன்ஓர் அங்கமாகவே பாகிஸ்தானைச் சேர்ந்த உயர்மட்டக் குழுவினர் ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளது.
அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட முக்கியமான செய்தியைப் பகிரவும், தோல்வியடைந்த முந்தைய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட ஆலோசனைகளை மேற்கொள்ளவும் இந்த விஜயம் திட்டமிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி உள்ளிட்டோர் அடங்கிய குழுவே தெஹ்ரானில் களமிறங்கியுள்ளது.




