உலகம்

முற்றுகை தொடர்ந்தால் கடல்வழி வர்த்தகம் முடங்கும் – ஈரான் சபதம்!

ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை தொடர்ந்தால், செங்கடல், ஓமான் வளைகுடா மற்றும் கடல் வழியாக நடைபெறும் வர்த்தகத்தை முடக்குவோம் என ஈரான் இராணுவம் எச்சரித்துள்ளது.

ஈரானிய அரசு தொலைக்காட்சியில் வெளியான ஒரு அறிக்கையில், மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தனது முற்றுகையைத் தொடர்ந்தால் மற்றும் “ஈரானின் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டேங்கர்களுக்கு பாதுகாப்பின்மையை உருவாக்கினால்”, அது போர் நிறுத்தத்தை மீறுவதற்கான “ஒரு முன்னுரையாகவும்” அமையும் என்று இராணுவத்தின் மத்திய கட்டளை மையத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமியக் குடியரசின் சக்திவாய்ந்த ஆயுதப் படைகள், பாரசீக வளைகுடா, ஓமான் கடல் மற்றும் செங்கடல் ஆகியவற்றில் எந்தவொரு ஏற்றுமதி அல்லது இறக்குமதியும் தொடர அனுமதிக்காது,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தனது தேசிய இறையாண்மை மற்றும் நலன்களைப் பாதுகாக்க ஈரான் தீர்க்கமாக செயல்படும்” என்றும் அவர் மேலும் கூறினார்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!