அந்தமான் கடலில் படகு விபத்து – 250 பேர் உயிரிழந்திருக்கலாம்!
கடந்த வாரம் அந்தமான் கடலில் ரோஹிங்கியா அகதிகள் மற்றும் பங்களாதேஷ் நாட்டினரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 250 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பங்களாதேஷின் டெக்னாஃபிலிருந்து புறப்பட்ட படகு, மலேசியா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியது.
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல் மற்றும் அதிகப்படியான கூட்டம் காரணமாக படகு கவிழ்ந்ததாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையர் தெரிவித்துள்ளார்.
நீண்டகால இடப்பெயர்வினால் ஏற்படும் பேரழிவுகரமான மனித இழப்புகளையும், ரோஹிங்கியா மக்களுக்கு நீடித்த தீர்வுகள் இல்லாததையும் இந்தச் சம்பவம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மியான்மரைச் சேர்ந்த, துன்புறுத்தப்படும் முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியர்கள், சிறந்த வாய்ப்புகளைத் தேடி, பங்களாதேஷில் உள்ள நெரிசல் மிகுந்த முகாம்களிலிருந்து மலேசியாவிற்கு ஆபத்தான கடல் பயணங்களை அடிக்கடி மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.





