திருமலையில் நீரில் மூழ்கிய சகோதரர்கள் சடலங்களாக மீட்பு!
நீரில் அடித்துச்செல்லப்பட்ட மூன்று சகோதரர்கள் சடலங்களாக மீடக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமாவதி பாலத்துக்கு அருக்கிலேயே இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாலத்துக்கு கீழ் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள நீரில் மூழ்கி காணாமல் போனார்கள்.
சோமாவதி வீதி, சேருநுவர-ஜெமுனுபுர பகுதியைச் சேர்ந்த மூன்று சகோதரர்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர்.
தந்தை மற்றும் நான்கு மகன்கள் நேற்று (14) செவ்வாய்கிழமை மாலை சோமதி பாலத்திற்கு கீழ் உள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.
இதன்போதே மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.
அவர்கள் மூவரையும் தேடும் பணிகள் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட போதிலும் சடலங்கள் மீட்கப்படாத நிலையில் மீண்டும் இன்று காலை மீட்புப்பணி பணி முன்னெடுக்கப்பட்டது.
அதில் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டதோடு மாலைவேளை மற்றைய இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட சடலங்கள் மூதூர் தள வைத்திசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.





