புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

பார்த்துக்கொண்டே இருக்கலாம் சமந்தாவின் அழகை…

  • November 5, 2025
  • 0 Comments

நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் நீல நிறத்தில் உடலை ஒட்டியபடி ஒரு உடையுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. பாலிவூட் நடிகைகளுக்கு நிகராக டைட்டான உடையை அணிந்துக் கொண்டு நடிகை சமந்தா போஸ் கொடுத்தாலும், கவர்ச்சியாக இல்லை. பார்ப்பதற்கு அழகாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது டிரெண்டாகி வருகின்றன.

இலங்கை

நுகேகொடை பேரணி குறித்து ராஜித அதிருப்தி – பங்கேற்பது பற்றி இறுதி முடிவில்லை!

  • November 5, 2025
  • 0 Comments

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பது தொடர்பில் தான் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். மேற்படி பேரணிக்கு ஆதரவை வழங்கும் முடிவை கட்சி எடுத்திருந்தாலும், அது பற்றி தான் இன்னமும் பரிசீலித்துவருவதாகவும் ஊடக சந்திப்பின்போது அவர் குறிப்பிட்டார். “தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்மீது நாட்டு மக்கள் அதிருப்தி அடைந்துவருகின்றனர். எனவே, எதிரணி வசம் சிறந்த மாற்று […]

உலகம்

பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி – 66 பேர் மரணம்

  • November 5, 2025
  • 0 Comments

பிலிப்பைன்ஸை ஒரு சக்திவாய்ந்த சூறாவளி தாக்கி பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய மிக வலிமையான சூறாவளி இது என்று கூறப்படுகிறது. குறைந்தது 66 பேர் உயிரிழந்துள்ளனர். 400,000 க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மக்கள் வசிக்கும் நகரங்கள் உட்பட பெரிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், சூறாவளி பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரையிலான அறிக்கைகளின்படி, இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

இலங்கை

இலங்கையில் தொழிற்சாலையில் விபத்து – இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

  • November 5, 2025
  • 0 Comments

மஸ்கெலியா, மவுசாகலை தோட்ட தேயிலை தொழிற்சாலையில் இன்று அதிகாலை 2.10 மணியளவில் கொழுந்து அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி, தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார். 4 பிள்ளைகளின் தந்தையான கிட்ண்ணன் விஜயகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் ஹட்டன் நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வருகைதந்து ஆராய்ந்த பிறகு , சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, சட்ட […]

உலகம் செய்தி

டுபாயில் விற்பனையாகும் உலகின் மிக விலையுயர்ந்த கோப்பி – அதிர்ச்சியை ஏற்படுத்திய விலை

  • November 5, 2025
  • 0 Comments

உலகிலேயே மிக விலையுயர்ந்த கோப்பி, தற்போது டுபாயில் கபேகளில் விற்பனை செய்யப்படுகிறன. பனாமாவிலுள்ள உயர் ரகத்திலான கோப்பி கொட்டைகளிலிருந்து இவை பிரத்தியேகமாக தயாரிக்கப்படுகிறது. டுபாயில் ஒரு கோப்பை கோப்பி 3,600 திர்ஹாமிற்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிகளவான கொள்வனவாளர்கள் முன்னிலையில் உயர்தரத்திலான கோப்பிக் கொட்டைகள் ஏலம் விடப்படும். பல மணிநேரம் காத்திருந்து அதனை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. அதற்கமைய ஏலத்தில் 2 கிலோ கோப்பி கொட்டைகள், சுமார் 2.2 மில்லியன் திராமிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய ஒரு […]

உலகம்

சிங்கப்பூர் தொழில் சந்தையில் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடி

  • November 5, 2025
  • 0 Comments

சிங்கப்பூர் சந்தையில் வேலைவாய்ப்பு பெரியதொரு நெருக்கடியாக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் தொழில்நுட்பம் உட்பட சில துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. எனினும், வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. உலகப் பொருளாதாரம் மெதுவாகச் சென்று கொண்டிருப்பதால், வேலைக்கு உத்தரவாதம் இல்லாத நிச்சயமற்ற நிலை காணப்படுகிறது. சிங்கப்பூரில் மொத்த வேலைகளின் எண்ணிக்கை மூன்று வீதம் கூடியுள்ளதாக லிங்க்ட்இன் (LinkedIn) தளத்தின் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. அதேவேளை, வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக, 11 வீதம் அதிகரித்துள்ளது. இந்த […]

உலகம்

சீனாவில் சிறுவனுக்கு எமனாக வந்த பானம் – பெற்றோர் விடுத்துள்ள எச்சரிக்கை

  • November 5, 2025
  • 0 Comments

சீனாவில் பானத்திற்குள் இருந்து உருண்டை ஒன்று மூச்சுக்குழாயில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பதிவாகி உள்ளது. சம்பவத்தில் மூன்று வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறுவன் பருகிய பபுள் டீ (Bubble Tea) பானத்தில் இருந்த ‘போபா’ உருண்டையே அவனுக்கு எமனாக மாறியுள்ளதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். தமது பிள்ளையின் மரணத்திற்கு பானத்தை விற்பனை செய்த கடை மற்றும் அந்தக் கடைத்தொகுதி ஆகிய இரண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்று சிறுவனின் பெற்றோர் குற்றம் […]

இலங்கை

ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக பொதுஜன பெரமுன மாறும்! மஹிந்த கட்சி உறுப்பினர் நம்பிக்கை

  • November 5, 2025
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தல் நடக்கும்பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே சபைகளில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிவி சானக தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதாக இருந்தால் பழைய முறைமையின்கீழ் அதனை செய்யலாம். நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் அதற்குரிய சட்டத்திருத்தத்தை நிறைவேற்றலாம். ஆனால் தேர்தல் நடத்தப்பட்டால் தமக்கு ஏற்படும் நிலை குறித்து அரசாங்கம் அஞ்சுகின்றது. அதனால்தான் எல்லை நிர்ணய […]

இலங்கை

வவுனியாவில் மனைவியைக் கொலை செய்துவிட்டு மகளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த கணவர்

  • November 5, 2025
  • 0 Comments

வவுனியா – ஈச்சங்குளம் காவல் பிரிவுக்குட்பட்ட கல்மடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தலையில் காயங்களுடன் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் வந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ஈச்சங்குளம் காவல் நிலையத்தில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. கல்மடு பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய திருமணமான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குடும்பத் தகராறு காரணமாக நேற்று காலை அந்தப் பெண் தனது கணவரால் கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலையைச் செய்த பின்னர், கணவர் […]

உலகம்

உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலையில் ஏற்படவுள்ள பாரிய அதிகரிப்பு

  • November 5, 2025
  • 0 Comments

உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சந்தைத் தகவல்களுக்கு அமைய தங்கம் விலை உயருவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளதாக, சிங்கப்பூரின் OCBC வங்கியின் முதலீட்டுப் பிரிவு நிர்வாக இயக்குநர் வாசு மேனன் (Vasu Menon) தெரிவித்துள்ளார். அமெரிக்க மத்திய வங்கி அதன் வட்டி வீதத்தை அடுத்த மாதம் குறைக்கவுள்ள நிலையில், இது தங்கத்தின் விலையில் பாரிய தாக்கத்தைச் செலுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வட்டி விகிதங்கள் குறையும்போது, முதலீட்டாளர்கள் வட்டி இல்லாத […]