ஐரோப்பா செய்தி

பிரெக்ஸிட் மறுசீரமைப்பு ஒப்பந்தம் – 100,000 விசாக்களுக்கு உச்சவரம்பு நிர்ணயம்

பிரெக்ஸிட் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில், 100,000 விசாக்களுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும் என்று பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தற்காலிகமாக ஒப்புக்கொண்டுள்ளதாக The i Paper  செய்தி வெளியிட்டுள்ளது.

திட்டமிடப்பட்ட “இளைஞர் அனுபவ” திட்டத்தின்  “youth experience” scheme  கீழ் எத்தனை பேரை அனுமதிப்பது அல்லது உள்வாங்குவது என்பது  தொடர்பில் சர்ச்சைகள் நிலவிய நிலையில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

ஆனாலும், இந்த திட்டத்திற்கு  ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் ஒப்புதல் அவசியமாகும்.

நாளைய தினம் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நடைபெறும் பேச்சுவார்த்தைகளை பொருத்து இந்த திட்டம் மாறுபடலாம்.

அதாவது வரும் 2028 ஆம் ஆண்டில் இருந்து  சுமார் 01  இலட்சம் பிரித்தானிய இளைஞர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணம் செய்யவும், படிக்கவும், வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்ளவும் இந்த விசா உதவும்.

இது வரும் 2030 ஆம் ஆண்டுவரை செல்லுபடியாகும். இந்த திட்டம் பிரித்தானியாவுக்கும்  பொருந்தும்.

 

 

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி