செய்தி விளையாட்டு

FIFA தலைவர் பதவிக்கு மும்முனைப் போட்டி

FIFA தலைவர் ஜியானி இன்பான்டினோ Gianni ⁠⁠Infantino தலைமைப் பதவிக்கு மீண்டும் போட்டியிட முயற்சிக்கும் நிலையில், பிரான்ஸ் மற்றும் ஜப்பான் கால்பந்து சம்மேளனத் தலைவர்களும் தலைமைப் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

FIFA தலைவர் ஜியானி இன்பான்டினோ Gianni ⁠⁠Infantino தலைமைப் பதவிக்கு மீண்டும் போட்டியிட முயற்சிக்கும் நிலையில், பிரான்ஸ் மற்றும் ஜப்பான் கால்பந்து சம்மேளனத் தலைவர்களும் தலைமைப் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் கால்பந்து சம்மேளனத் தலைவர் பிலிப் டியாலோ (Philippe Diallo) மற்றும் ஜப்பான் கால்பந்து சம்மேளனத் தலைவர் கோசோ தஷிமா (Kozo Tashima) ஆகியோர் இன்பான்டினோவுக்கு எதிராக போட்டியிடவுள்ளனர்.

கடந்த மாதம் போட்டியிடும் நோக்கத்தை அறிவித்த முன்னாள் சுவிட்சர்லாந்து வீரர் ரமோன் வேகா (Ramon Vega), வியாழக்கிழமை FIFA அறிவித்த வேட்பாளர்களின் பட்டியலில் இடம்பெறவில்லை.

பிரான்ஸ் கால்பந்து சம்மேளனத் தலைவர் டியாலோ, திங்கட்கிழமை தனது வேட்புமனுவை அறிவித்தார். FIFA நிர்வாகக் குழு மற்றும் FIFA கவுன்சிலில் பிரதிநிதித்துவம் செய்யும் UEFA உறுப்பு நாடுகளின் கால்பந்து சம்மேளனங்களின் ஆதரவுடன் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஜப்பான் கால்பந்து சம்மேளனத் தலைவர் தஷிமா, இம்மாத தொடக்கத்தில் தனது போட்டியிடும் விருப்பத்தை அறிவித்ததுடன், புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வேட்புமனுவையும் சமர்ப்பித்தார்.

“வேட்புமனுக்கள் பரிசீலனைக்காகவும், வேட்பாளர்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான தீர்மானத்தை எடுப்பதற்காகவும் தேர்தல் குழுவிடம் அனுப்பப்பட்டுள்ளன” என FIFA அறிக்கை வெளியிட்டுள்ளது.

“பரிந்துரைக்கப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்களின் பெயர்கள் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி 18ஆம் திகதிக்குள் உறுப்பு நாடுகளுக்கு அறிவிக்கப்படும்” என்றும் FIFA தெரிவித்துள்ளது.

உலகக் கிண்ணம் மற்றும் ஏனைய முக்கிய போட்டிகளில் பங்குகளை விற்பனை செய்வதற்கான திட்டமான FIFA Forward Enterprise (FFE) முன்மொழிவு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இன்பான்டினோ பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ச்சியாக எழுந்துள்ளன.

இருப்பினும், 2016ஆம் ஆண்டு முதல் FIFA தலைவராகப் பதவி வகித்து வரும் 56 வயதான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இன்ஃபான்டினோ, உலகெங்கிலும் உள்ள உறுப்பு நாடுகளின் போதிய ஆதரவு தனக்கு இருப்பதாகவும், மீண்டும் தலைவராகத் தெரிவுசெய்யப்பட முடியும் என்றும் நம்புகிறார்.

2023ஆம் ஆண்டு பிரான்ஸ் கால்பந்து சம்மேளனத் தலைவராகப் பொறுப்பேற்ற டியாலோ, FFE விவகாரம் தொடர்பாக இந்த ஆண்டு இன்பான்டினோவுக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய கால்பந்து சம்மேளனங்கள் விலகியதில் முக்கிய பங்காற்றினார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி