இலங்கை

நுகேகொடை பேரணி குறித்து ராஜித அதிருப்தி – பங்கேற்பது பற்றி இறுதி முடிவில்லை!

GALLE, SRI LANKA – JULY 09: Anti-government protesters gather in the street during protests calling for the resignation of Sri Lanka’s President Gotabaya Rajapaksa and Prime Minister Ranil Wickremesinghe on July 09, 2022 in Galle, Sri Lanka. Beleaguered Sri Lankan President Gotabaya Rajapaksa has said he would resign after he fled his official residence in Colombo following thousands of anti-government protesters storming the compound. (Photo by Buddhika Weerasinghe/Getty Images)

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பது தொடர்பில் தான் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மேற்படி பேரணிக்கு ஆதரவை வழங்கும் முடிவை கட்சி எடுத்திருந்தாலும், அது பற்றி தான் இன்னமும் பரிசீலித்துவருவதாகவும் ஊடக சந்திப்பின்போது அவர் குறிப்பிட்டார்.

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்மீது நாட்டு மக்கள் அதிருப்தி அடைந்துவருகின்றனர். எனவே, எதிரணி வசம் சிறந்த மாற்று தேர்வு இருக்க வேண்டும். மாறாக மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் பயணிக்க தொடங்கினால் அது பிரச்சினைக்கே வழிவகுக்க வேண்டும்.

மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான பொது எதிரணியொன்று கட்டியெழுப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும்.” என ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்