செய்தி

2027 இல் ஈரானுக்கு என்ன நடக்கும்? ட்ரம்பின் அறிவிப்பால் பரபரப்பு

ஈரானுடனான மோதல் தொடர்பில் 2027 ஜனவரி முதலாம் திகதிக்குப் பின்னர் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான மோதல் தொடர்பில் 2027 ஜனவரி முதலாம் திகதிக்குப் பின்னர் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கான விஜயத்தின் போது Fox நியூஸ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஈரானுக்கு எதிரான மோதலை தீவிரப்படுத்துவது குறித்து எச்சரிக்கை விடுத்து வரும் ட்ரம்ப், மறுபுறம் போர் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகளையும் வெளிப்படுத்தி வருகின்றார்.

இரு தரப்புக்கும் இடையில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடர்பில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகின்றது.

“புதிய ஆண்டு வரவுள்ளது. ஜனவரி 1ஆம் திகதிக்குப் பின்னர் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம். அவர்கள் மிகவும் மோசமாக நடந்துகொண்டுள்ளனர்” என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

வொஷிங்டனில் கதிரியக்கப் பொருட்களைப் பரப்பும் வகையிலான ‘டர்ட்டி பாம்’ (Dirty Bomb) வெடிகுண்டை வெடிக்கச் செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாக CNN வெளியிட்ட செய்தி தொடர்பிலும் ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், அமெரிக்க தலைநகர மக்கள் அச்சமடைய வேண்டிய நிலை இருப்பதாக தாம் கருதவில்லை எனக் குறிப்பிட்டார்.

எனினும், அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்தியதைத் தொடர்ந்து ஈரான் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருவதற்கான அறிகுறிகள் இருப்பதாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சிப்பதாக இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஏனைய மேற்கத்திய நாடுகள் நீண்டகாலமாக குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி