அக்வான் புயல் எதிரொலி – ஒடிசாவில் பாடசாலைகளுக்கு விடுமுறை
அக்வான் புயல் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நாளையதினம் கரையை கடக்கும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ள நிலையில் 72000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நர்சபூர் மற்றும் பூரிக்கு இடையில் புயல்கரையை கடக்கும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இதன்போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும், காற்றின் வேகம் மணிக்கு 110 கி.மீ. வரை அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக 06 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்காக அவசரகால பேரிடர் மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




