உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலையில் ஏற்படவுள்ள பாரிய அதிகரிப்பு
உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சந்தைத் தகவல்களுக்கு அமைய தங்கம் விலை உயருவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளதாக, சிங்கப்பூரின் OCBC வங்கியின் முதலீட்டுப் பிரிவு நிர்வாக இயக்குநர் வாசு மேனன் (Vasu Menon) தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மத்திய வங்கி அதன் வட்டி வீதத்தை அடுத்த மாதம் குறைக்கவுள்ள நிலையில், இது தங்கத்தின் விலையில் பாரிய தாக்கத்தைச் செலுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வட்டி விகிதங்கள் குறையும்போது, முதலீட்டாளர்கள் வட்டி இல்லாத தங்கத்தின் மீது அதிக கவனம் செலுத்துவார்கள்.
வட்டி விகிதக் குறைப்பைத் தவிர, தங்க விலை உயர்வுக்கு வழிவகுக்கும் வேறு சில காரணிகளையும் மேனன் வெளிப்படுத்தியுள்ளார்.
பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் கையிருப்பை அதிகரிக்க தங்கத்தை அதிகளவில் கொள்வனவு செய்கின்றன. தனிப்பட்ட முதலீட்டாளர்களின் தேவையும் தங்கத்தை நோக்கிச் செல்கிறது.
அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை திகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தங்கத்தின் மீதான தேவை அதிகரிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் (Jerome Powell) அடுத்த ஆண்டு பதவி விலகவிருக்கும் நிலையில், அதன் பிறகு மத்திய வங்கி தன்னிச்சையாகச் செயல்படுமா என்ற ஐயம் காரணமாகவும் தங்கத்தின் விலை உயரலாம்.
இந்தக் காரணிகளின் அடிப்படையில் தங்கத்தின் விலை உலகளாவிய ரீதியில் பாரிய அதிகரிப்பை பதிவு செய்யும் என முதலீட்டாளர்கள் அச்சம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





