வரிகள் தொடர்பில் டிரம்ப் நிர்வாகக் குழுவைச் சந்திக்கும் கனேடிய வெளியுறவு, நிதி அமைச்சர்கள்
கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையைச் சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் இருவர் அமெரிக்காவின் அடுத்த அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகக் குழுவைச் சந்திக்கவுள்ளனர்.பேரழிவு ஏற்படுத்தக்கூடிய வர்த்தகப் போரைத் தவிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது கனடா. இந்நிலையில், கனடாவின் புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள திரு டோமினிக் லபுளோங்க், வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி இருவரும் டிரம்ப்பின் நிர்வாகக் குழுவினரைச் சந்திக்கும் பொருட்டு டிசம்பர் 26ஆம் திகதி ஃபுளோரிடா சென்றுள்ளதாக அமைச்சர் லபுளோங்கின் பேச்சாளர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார். ஜனவரி […]













