ஐரோப்பா

ஸ்பெயினல் கோலாகலமாக இடம்பெற்ற காளை திருவிழா : இளைஞர் ஒருவர் பலி!

  • September 10, 2024
  • 0 Comments

ஸ்பெயினில் பிரபலமான திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படும் காளை ஓட்டும் திருவிழாவில் இருபது வயது இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். ஸ்பெயினின் காஸ்டில்லே-லா மஞ்சாவில் உள்ள குவாடலஜாரா மாகாணத்தில் எல் காசார் என்ற இடத்தில் இந்த திருவிழா இடம்பெற்றுள்ளது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்ட நிலையில் பெயர் குறிப்பிடப்படாத 20 வயதுடைய இளைஞர் ஒருவர் காளை தாக்குதலில் பலியானதாக கூறப்படுகிறது. இந்த திருவிழாவில் சுமார் 1200 காளைகள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

போரில் மோசமான அத்தியாயத்தை தொடங்கிய உக்ரைன் : பற்றி எரியும் ரஷ்ய கட்டடங்கள்!

  • September 10, 2024
  • 0 Comments

உக்ரைன் – ரஷ்யாவிற்கு இடையில் இடம்பெற்று வரும் போரில் மோசமான அத்தியாயம் நேற்று (10.09) உதயமாகியுள்ளது. ரஷ்யாவின் முக்கிய நகரத்தை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் பல பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். அத்துடன் ரஷ்யா அவசர நிலையை பிரகடனப்படுத்தி விமான சேவைகளை இரத்து செய்துள்ளது. ஏறக்குறைய 140 ட்ரோன்கள் ரஷ்யாவை நோக்கி ஏவப்பட்டதாக ரஷ்ய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. பெரும்பாலான ஆளில்லா வாகனங்களை இடைமறிக்க முடிந்தாலும், வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் பிரதேசத்தில் இருந்து […]

உலகம்

அதிகரித்து வரும் online பயன்பாடு : மூடப்படும் வங்கிக் கிளைகள்!

  • September 10, 2024
  • 0 Comments

பாங்க் ஆஃப் அமெரிக்கா  உள்ளுர் வங்கிக் கிளைகளை மூடுவதாக அறிவித்திருந்தது. இதற்கமைய கடந்த ஆகஸ்ட் மாதம் 04 முதல் 18 ஆம் திகதிக்கு இடையில் 40 இற்கும் மேற்பட்ட வங்கிக்க கிளைகள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுள்ள Chase, Wells Fargo and Santander ஆகிய முக்கிய வங்கிக் கிளைகளும் மூடப்பட்டுள்ளன. கலிபோர்னியாவில் இருந்து நியூ ஜெர்சி வரையிலான பகுதிகளில் உள்ள பல வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளதாக நாணயக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்கு (OCC) உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் சேவைகளே […]

இலங்கை

இலங்கை : சாதாரண பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

  • September 10, 2024
  • 0 Comments

2023 ஆம் ஆண்டுக்கான APOSA பொதுப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், பொதுப் பரீட்சை பெறுபேறுகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், “சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அந்தப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வழங்கத் தயாராக உள்ளோம். எனது தேவை மிகவிரைவில் […]

இந்தியா

இந்தியா – மணிப்பூரில் மாணவர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல்

  • September 10, 2024
  • 0 Comments

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் செப்டம்பர் 8ஆம் திகதி இரவு ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரியும் பழங்குடியினப் பெண்ணும் கொலை செய்யப்பட்டதை அடுத்து, அங்குள்ள மக்கள் கொதித்தெழுந்தனர். அம்மாநிலத்தின் தலைநகரமான இம்பாலில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் காவல்துறையினருடன் கைகலப்பில் ஈடுபட்டனர்.வன்முறைச் சம்பவங்கள் காரணமாக செப்டம்பர் 1ஆம் திகதியிலிருந்து 11 பேர் உயிரிழந்து விட்டனர். இந்நிலையில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி, பழங்குடியினப் பெண் ஆகியோரைக் கொலை செய்தவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.அதுமட்டுமல்லாது, காவல்துறை […]

வட அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்! கமலா – டிரம்ப் இன்று நேருக்கு நேர் விவாதம்

  • September 10, 2024
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் இன்று நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபடவுள்ளனர். அமெரிக்காவின் ஜனநாயக்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தமது கொள்கை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். ‘New Way Forward’ எனும் கொள்கை அறிக்கை வாய்ப்புகள் நிறைந்த பொருளாதாரத்தை உருவாக்க உறுதியளிக்கிறது. குடும்பங்களின் செலவுகளைக் குறைக்கவும் அதில் உறுதி கூறப்பட்டிருக்கிறது. ஹாரிஸூம் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்ப்பும் இன்று நேருக்கு நேர் விவாதம் நடத்தவிருக்கின்றனர். இருவரும் நேரில் சந்திப்பது […]

செய்தி

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 40 பேர் பலி

  • September 10, 2024
  • 0 Comments

பாலஸ்தீனத்தின் கான் யூனிஸில் உள்ள அல்-மவாசி நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 60 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் போராளிகள் தங்கியுள்ள கட்டுப்பாட்டு மையத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அனைவரும் பொதுமக்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பொழுதுபோக்கு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இத்தனை முறை கைதாகி இருக்கிறாரா?

  • September 10, 2024
  • 0 Comments

1977-ம் ஆண்டு தமிழ்நாட்டில் முதல்முறையாக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தார் எம்.ஜி.ஆர். அதே காலகட்டத்தில் தான் நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் வெற்றிகரமான நடிகராக வலம் வரத் தொடங்கினார். அந்த நேரத்தில் தான் பிரியா, முள்ளும் மலரும் போன்ற வெற்றிப்படங்கள் ரஜினிக்கு வெளியானது. அதேபோல 1979ம் ஆண்டு ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடித்த நினைத்தாலே இனிக்கும் திரைப்படம் ரிலீஸ் ஆனது. அந்த படத்தின் ரிலீசுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தான் ஒரு முக்கியமான செய்தி நாளிதழ்களில் இடம்பெற்றது. அது என்னவென்றால், […]

ஆசியா செய்தி

வியட்நாமில் இடிந்து விழுந்த பாலம் – 13 பேர் மாயம்

  • September 10, 2024
  • 0 Comments

வியட்நாமில் பாலம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் 13 பேர் காணாமல் போயுள்ளனர். யாகி புயல் காரணமாக வடக்கு வியட்நாமில் போக்குவரத்து மிகுந்த பாலம் இடிந்து விழுந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோசமான வானிலையால் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வடக்கு வியட்நாம் முழுவதும் அழிவை ஏற்படுத்திய 30 ஆண்டுகளில் இல்லாத சக்திவாய்ந்த புயல் இதுவாகும். யாகி சூறாவளியின் தாக்கத்தால் வடக்கு வியட்நாமில் கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செய்தி

ஆஸ்திரேலியாவில் வீடு ஒன்றுக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த 2 சிறுவர்களின் சடலங்கள் மீட்பு

  • September 10, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் – சிட்னியின் புளூ மவுண்டன்ஸ் பகுதியில் உள்ள வீட்டில் இரண்டு சிறுவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய நேரப்படி இன்று மதியம் 12.40 மணியளவில் இந்த வீட்டில் ஒரு பெண்ணும் இரண்டு சிறுவர்களும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் இந்த வீட்டிற்கு வந்துள்ளனர். 9 மற்றும் 11 வயதுடைய இரு சிறுவர்கள் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 42 வயதான பெண் ஒருவர் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வெஸ்ட்மீட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர் உடல்நிலை […]