பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 40 பேர் பலி
பாலஸ்தீனத்தின் கான் யூனிஸில் உள்ள அல்-மவாசி நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 60 பேர் காயமடைந்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்பின் போராளிகள் தங்கியுள்ள கட்டுப்பாட்டு மையத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அனைவரும் பொதுமக்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 5 times, 1 visits today)