வியட்நாமில் இடிந்து விழுந்த பாலம் – 13 பேர் மாயம்
வியட்நாமில் பாலம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் 13 பேர் காணாமல் போயுள்ளனர்.
யாகி புயல் காரணமாக வடக்கு வியட்நாமில் போக்குவரத்து மிகுந்த பாலம் இடிந்து விழுந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மோசமான வானிலையால் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வடக்கு வியட்நாம் முழுவதும் அழிவை ஏற்படுத்திய 30 ஆண்டுகளில் இல்லாத சக்திவாய்ந்த புயல் இதுவாகும்.
யாகி சூறாவளியின் தாக்கத்தால் வடக்கு வியட்நாமில் கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 3 times, 1 visits today)