ஆசியா

ஜப்பானின் அதிவேக ரயிலை தாமதப்படுத்திய பாம்பு – 600 பயணிகள் அவதி

  • April 19, 2024
  • 0 Comments

ஜப்பானின் அதிவேக ரயிலுக்குள் புகுந்த பாம்பினால் ரயில் தாமதமாக புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வெறும் 40 செண்டிமீட்டர் நீளம் கொண்ட பாம்பினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளார். தோக்கியோவில் இருந்து ஒசாகாவுக்குப் புறப்பட வேண்டிய ரயிலில் குட்டிப் பாம்பு காணப்பட்டதாக ஜப்பானின் மத்திய ரயில்வே நிறுவனம் தெரிவித்தது. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அவர்கள் அந்த ரயிலில் பயணம் செய்வதற்குப் பதிலாக இன்னொரு ரயிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரயில் தாமதமாகப் புறப்பட்டதால் 600க்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டனர். பயணிகள் எவரும் […]

பொழுதுபோக்கு

விவாகரத்து எல்லாம் நாடகம்… ஒன்றாக குடித்தனம் நடத்தும் ஜோடி

  • April 19, 2024
  • 0 Comments

தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் தங்களது பிரிவை கடந்த 2022ஆம் ஆண்டு அறிவித்தனர். பிரிவை அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த வாரம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு முறையிட்டனர். 2004ஆம் ஆண்டு நடந்த தங்களுடைய திருமணம் செல்லாத என அறிவிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த நிலையில், இந்த விவாகரத்தே ஒரு நாடகம் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் விவாகரத்து வைத்து நாடகம் நடத்தி வருவதாகவும், இருவரும் சேர்ந்து சென்னையில் வாங்கி […]

வட அமெரிக்கா

கனேடிய சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை – இந்தியா சென்றால் அவதானம்

  • April 19, 2024
  • 0 Comments

கனேடிய சுற்றுலா பயணிகளை கவனமுடன் இருக்குமாறு கனடா அரசாங்கம் எச்சரித்துள்ளது. மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் இந்தியாவிற்கு சுற்றுலா செல்வோர் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடைபெறும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்திய கனடா அரசு, சில இடங்களில் திடீரென ஊரடங்கு பிறப்பிக்கப்படும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது. அஸ்ஸாம், மனிப்பூர், ஜம்மு கஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் கனடா அரசு தெரிவித்துள்ளது.

செய்தி

பிரித்தானியாவில் வாடகைக்கு வசிப்பவர்களின் பரிதாப நிலை – வீடுகளை விட்டு வெளியேற்றும் உரிமையாளர்கள்

  • April 19, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் நூறாயிரக்கணக்கான மக்கள் விரும்பம் இல்லாமல் வாடகை வீடுகளில் குடியேறுவதாக புதிய ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. பாதுகாப்பற்ற குத்தகைதாரர்கள், விலை நிர்ணயம் செய்தல், வெளியேற்ற அறிவிப்புகள் அல்லது வெறுமனே வெளியேறுமாறு கூறப்படுவது ஆகிய விடயங்கள் பிரித்தானியாவில் வாடகைக்கு தங்கியிருப்பவர்களின் தேவையற்ற நகர்வுகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளதென இந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. வாடகைதாரர்களுக்கு ஒவ்வொரு நகர்வுக்கும் சராசரியாக 669 பவுண்ட் செலவாகும் என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 12 மாதங்களில் 830,000 வாடகைதாரர்கள் தாங்கள் வாடகைக்கு எடுத்து வந்த வீட்டில் […]

பொழுதுபோக்கு

மணிக்கணக்கில் காத்திருந்த என்னை விடல… அஜித்த மட்டும் விட்டுட்டாங்க…

  • April 19, 2024
  • 0 Comments

இன்று நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தங்கள் வாக்கை செலுத்த மக்கள் தீவிர காட்டி வருகிறார்கள். இன்று காலை சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வருகை தந்து, காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார் நடிகர் அஜித். இந்நிலையில் அஜித் வருவதற்கு முன்பே நான் வந்து வெகு நேரமாக காத்திருந்ததாகவும் எனக்கு 82 வயதாகியும் என்னை உள்ளே அனுப்பவில்லை என்று ஆதங்கத்துடன் கூறியிருக்கிறார். இது தொடர்பான செய்தியும் புகைப்படமும் வைரலகி வருகிறது.

இலங்கை

தமிழர் பகுதியில் சோகம் : வவுனியாவில் கணவனுக்காக உயிரைவிட்ட மனைவி!

  • April 19, 2024
  • 0 Comments

வவுனியா வடக்கு, நெடுங்கேணி, 6ம் கட்டை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் அவசரமாக நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து குறித்த நபரை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல தயாராகிய போது குறித்த குடும்பஸ்தரின் மனைவி வவுனியா வைத்தியசாலை செல்வதற்கான பொருட்களை எடுத்து வர வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது, நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையிலேயே மரணமடைந்துள்ளார். குறித்த தகவலை வீட்டிற்கு சென்றிருந்த அவரது மனைவிக்கு தெரியவந்ததையடுத்து, கணவனின் இறப்பை தாங்க […]

ஆசியா

பாகிஸ்தானில் வெளிநாட்டினர் பயணம் செய்த வாகனத்தை குறிவைத்து தற்கொலைக் குண்டு தாக்குதல்!

  • April 19, 2024
  • 0 Comments

பாகிஸ்தானின் கராச்சியில் வெளிநாட்டினர் பயணம் செய்த வாகனம் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் குறைந்தது இரண்டுபேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் வாகனத்தில் இருந்த 5 வெளிநாட்டவர்களும் உயிர் தப்பியுள்ளனர். அவர்கள் அனைவரும் ஜப்பானியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை நடத்திய பதில் தாக்குதலில் தற்கொலை குண்டுதாரி மற்றும் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிக்கை கூறியது. பாகிஸ்தானில் அரசாங்கத்தை எதிர்க்கும் பயங்கரவாதிகள் சீனா உள்ளிட்ட வெளிநாட்டினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தி

இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலை மறுக்கும் ஈரான்

  • April 19, 2024
  • 0 Comments

இஸ்ரேலின் ஆளில்லா வானூர்திகளைச் சுட்டு வீழ்த்தியதாகவும் இப்போதைக்கு ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் இஸ்பாஹான் நகரில் உள்ள ராணுவ விமானத் தளத்தில் வெடிகுண்டுச் சத்தம் மூன்று முறை கேட்டதாக ஈரானின் செய்தி நிறுவனம் தெரிவித்தது. இதற்குமுன் இஸ்ரேலிய ஏவுகணைகள் ஈரானை நேற்று தாக்கியதாக செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. இஸ்பாஹானில் உள்ள விமான நிலையத்திலும் வெடிகுண்டுச் சத்தம் கேட்டது என்று ஈரானிய செய்தி நிறுவனம் தெரிவித்தது அதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இஸ்பாஹானில் பல […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் 40 நாட்களாக வெறும் பழச்சாறை மாத்திரம் குடித்து வாழ்ந்த பெண்!

  • April 19, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் 40 நாட்களாக வெறும் பழச்சாறை மாத்திரம் குடித்து வந்தாக தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்லாந்தை சேர்ந்தவர் ஆனிஆஸ்போர்ன். இவர் தவக்காலத்தின் போது 40 நாட்களும் ஆரஞ்சு பழச்சாறு மட்டுமே குடித்து வந்ததாக கூறி ஒரு காணொலியை பகிர்ந்துள்ளார். அந்த காணொலியில் இந்த அனுபவம் அற்புதமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். உணர்ச்சி, உடல் மற்றும் ஆன்மீக நன்மைகளை அனுபவித்தேன் என கூறும் அவர், இந்த ‘மோமோ டயட்’ தனது நீண்ட கால உணவு பழக்கத்தோடு […]

வாழ்வியல்

அதிகமா கோவப்பட்டால் முகச்சுருக்கம் ஏற்படுமா?

  • April 19, 2024
  • 0 Comments

இளம் வயதிலேயே ஏற்படும் முதுமை தோற்றத்திற்கான காரணமும், அதற்கான தீர்வையும் இப்பதிவில் காண்போம். நாம் ஒருவரின் வயதை கணக்கிட வேண்டுமானால் அவரின் சருமத்தின் தோலை வைத்து தான் கூறுவோம். அந்த அளவுக்கு சருமம் பார்ப்போரை கவனிக்கத் தூண்டும். ஆனால் தற்போது உள்ள தலைமுறையினர் இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தை பெற்றிருக்கின்றனர் இதற்கான காரணத்தை பார்ப்போம். காரணங்கள்: புகைப்பிடித்தல் ,மது அருந்துதல், இரவில் தாமதமாக உறங்குதல், மன அழுத்தம், குடும்ப பொறுப்புகள், மரபணு. இதில் மிக முக்கியமானது அடிக்கடி […]