இலங்கை செய்தி

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த பெண் அதிரடி கைது

  • April 20, 2024
  • 0 Comments

நுவரெலியா டொபாஸ் பகுதியில் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் ஒருவரும் மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வேன் ஒன்றை சோதனையிட்ட போது, ​​19 கிராம் குஷ் போதைப்பொருளும், 03 கிராம் ஹேஷ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும், 35 வயதான இங்கிலாந்து பிரஜையான பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வேனின் சாரதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

தோனியால் அதிர்ந்த மைதானம் – குயிண்டன் டி காக்கின் மனைவியின் பதிவு

  • April 20, 2024
  • 0 Comments

சிஎஸ்கே வீரர் எம்.எஸ்.தோனி பேட்டிங் செய்ய வந்தபோது ஆர்ப்பரித்த ரசிகர்களால் ஸ்மார்ட் வாட்ச்சில் பதிவான எச்சரிக்கையை இன்ஸ்டா ஸ்டோரியில் லக்னோ வீரர் குயிண்டன் டி காக்கின் மனைவி ஷாஷா பகிர்ந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி எந்த மைதானத்தில் விளையாடினாலும், அது சேப்பாக்கம் மைதானம் போல மகேந்திர சிங் தோனியால் மாறிவிடுகிறது. அவர் பேட்டிங் செய்ய எத்தனை பந்துகள் மீதம் இருந்து வந்தாலும், மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை பிளக்கிறது. நேற்று அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை […]

செய்தி வாழ்வியல்

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

  • April 20, 2024
  • 0 Comments

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இப்பதிவில் அறியலாம் . நெல்லிக்காய் : ஆயுளை வளர்க்கும் கனி எனவும் நெல்லிக்கனி அழைக்கப்படுகிறது. ஏழைகளின் ஆப்பிள் எனவும் கூறப்படுகிறது. தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டு வர ஆப்பிளை விட அதிக சத்துக்கள் கிடைக்கும். ஆயுர்வேத மருத்துவத்திலும் நெல்லிக்கனி பயன்படுத்தப்படுகிறது. நெல்லிக்கனியின் சத்துக்களும் நன்மைகளும்; நெல்லிக்கனியில் வைட்டமின்கள் நார்ச்சத்து ,சோடியம் பொட்டாசியம் பாஸ்பரஸ், கால்சியம் மெக்னீசியம் ,நியாசின் அமினோ அமிலங்கள் தயமின் அதிக அளவு விட்டமின் சி உள்ளது. […]

ஐரோப்பா

அமெரிக்கவாசி என்பதை உறுதி செய்த இளவரசர் ஹரி

  • April 20, 2024
  • 0 Comments

பிரித்தானிய மன்னர் சார்ல்ஸின் மகன் இளவரசர் ஹரி, இப்போது அமெரிக்கவாசி என்பதை உறுதிசெய்திருக்கிறார். 4 ஆண்டுகளுக்கு முன் அவர், மனைவி மேகனுடன் அமெரிக்காவின் தென் கலிபோர்னியாவில் வசிக்க ஆரம்பித்தார். இளவரசர் ஹரி தற்போது அமெரிக்கவாசி என்பதை இளவரசரின் பயண நிறுவனம் பிரித்தானிய அதிகாரிகளிடம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்தது. ஹரியும் மேகனும் ஊடகத் தொழில்துறையில் ஈடுபட அரச குடும்ப கடமைகளைக் கைவிட்டு அமெரிக்காவுக்குச் சென்றனர். அரச குடும்பக் கடமைகளைக் கைவிட்டதிலிருந்து ஹரி அரச குடும்பத்தைக் குறைகூறி வருகிறார் அமெரிக்கவாசி என்று […]

இலங்கை

இலங்கை காலநிலையில் திடீர் மாற்றம்

  • April 20, 2024
  • 0 Comments

இலங்கையின் சில பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்துடன் வடமத்திய, வடமேல், ஊவா […]

ஆசியா

உலகின் 2வது மிகச் சிறந்த விமான நிலையமாகிய சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம்

  • April 20, 2024
  • 0 Comments

உலகின் இரண்டாவது மிகச் சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. முதலிடத்தை, கத்தார் – தோஹாவில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையம் பிடித்து சாதித்துள்ளது. சாங்கி விமான நிலையம் உலகின் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தாலும், ஆசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான ஸ்கைட்ராக்ஸ் நடத்திய உலகளாவிய கணக்கெடுப்பில் இந்த அறிவிப்பு வெளியானது. நேற்று பிராங்பேர்ட்டில் நடந்த விருது வழங்கும் விழாவில் உலகின் சிறந்த விமான நிலையங்களுக்கு விருதுகள் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsAppஇல் அறிமுகமாகும் புதிய அம்சம்

  • April 20, 2024
  • 0 Comments

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் புதிதாக ‘பில்டர்ஸ்’ என்ற அம்சத்தை செவ்வாய்கிழமை அறிமுகம் செய்தது. இதன் மூலம் தனிநபர் மற்றும் குரூப் ஷேட்களை எளிதாக organise செய்து பார்க்க முடியும். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நியூ பில்டர்ஸ் அம்சத்தில் All, Unread மற்றும் Group மெசேஜ்கள் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் தனித்தனியாக மெசேஜ்களை படிக்கலாம். வாட்ஸ்அப் ஹோம் ஸ்கிரின் பக்கத்தில் இந்த அம்சம் இடம்பெறுகிறது. தற்போது படிப்படியாக இந்த […]

இலங்கை

இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி – சர்வதேச புலனாய்வு பிரிவினரின் கண்காணிப்பில் இலங்கை

  • April 20, 2024
  • 0 Comments

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு […]

செய்தி

ஜெர்மனியில் கைது செய்யப்பட்ட இலங்கையர் – 19 ஆண்டுகளின் பின் சிக்கிய மர்மம்

  • April 20, 2024
  • 0 Comments

இலங்கையர் ஒருவர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 1991ம் ஆண்டு ரொமானியாவில் கொலைக் குற்றச் செயலில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரொமானியாவின் புச்சரெஸ்ட் பகுதியில் 1991ம் ஆண்டு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலையுடன் தொடர்புடைய இலங்கையர் ஜெர்மனியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக் குற்றச்சாட்டுக்காக 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எதிர்வரும் 23ம் திகதி குறித்த இலங்கையர்கள் ஜெர்மனியிலிருந்து ரொமானியாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளார். நாடு கடத்தப்பட்டதன் பின்னர் குறித்த இலங்கையர் 19 […]

ஐரோப்பா

பிரான்ஸில் ரயிலில் பயணித்த பயணிக்கு நேர்ந்த கதி

  • April 20, 2024
  • 0 Comments

பிரான்ஸில் RER E ரயிலில் பயணித்த பயணித்த ஒருவர் திடீரென மரணமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த வியாழக்கிழமை இந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. Noisy-le-Sec ரயில் நிலையத்தில் இச்சம்பவம் காலை 7.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. ரயிலில் பயணித்த ஒருவர் திடீரென உடல்நலக்குறைவுக்கு உள்ளாகி மரணமடைடைந்துள்ளார். அதையடுத்து மருத்துவக்குழுவினர் அழைக்கப்பட்டு சில முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. ஆனால் அது பலனளிக்கவில்லை. அவர் மரணமடைந்ததை மருத்துவக்குழுவினர் உறுதிப்படுத்தினர். இச்சம்பவத்தினால் போக்குவரத்து தடைப்பட்டது. முற்பகல் 11 மணி அளவில் […]

error: Content is protected !!