ஒடிசாவில் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான படகு; நால்வர் பலி,7 பேர் மாயம்!
ஒடிசாவில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், மாயமான 7 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா மாவட்டத்தில் மகாநதி ஆறு உள்ளது. இங்கு அரசிடம் அனுமதி பெற்று ஏராளமான பயணிகள் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் சில படகுகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனவும், பாதுகாப்பு அம்சங்கள் கடைபிடிக்கப்படுவதில்லை எனவும் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை 7 மணி […]













