இலங்கை செய்தி

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த பெண் அதிரடி கைது

நுவரெலியா டொபாஸ் பகுதியில் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் ஒருவரும் மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வேன் ஒன்றை சோதனையிட்ட போது, ​​19 கிராம் குஷ் போதைப்பொருளும், 03 கிராம் ஹேஷ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும், 35 வயதான இங்கிலாந்து பிரஜையான பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வேனின் சாரதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை