பொழுதுபோக்கு

“என்னோட சப்போர்ட் இவருக்கு தான்…” ரச்சிதா போட்ட பதிவால் ஷாக் ஆன ரசிகர்கள்

  • December 20, 2023
  • 0 Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு பிடித்த போட்டியாளர் யார் என்கிற தகவலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தினேஷின் மனைவி ரச்சிதா. விஜய் டிவி சீரியல்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் ரச்சிதா. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த சக நடிகரான தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் இருவருமே சீரியல்களில் நடித்து வந்தனர். குறிப்பாக சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரச்சிதா உச்சத்துக்கு சென்றார். மறுபுறம் தினேஷும் பூவே பூச்சூடவா தொடர் மூலம் பேமஸ் ஆனார். இப்படி […]

இந்தியா பொழுதுபோக்கு

நடிகை ராஷ்மிகா டீப் ஃபேக் வீடியோ; வெளியிட்ட நால்வரை கைது செய்த பொலிஸார்!

  • December 20, 2023
  • 0 Comments

நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்த டீப் ஃபேக் வீடியோவை பரப்பிய நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது. பிரபல நடிகைகளையும் சாதாரண பெண்களையும் போலியாக ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகை ராஷ்மிகாவை ஆபாசமாக சித்தரித்து போலியாக தயாரிக்கப்பட்ட டீப் ஃபேக் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானபோது, இந்த விஷயம் பூதாகரமானது. டீப் ஃபேக் டெக்னாலஜி மூலமாக இந்த […]

இலங்கை

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசல் காவலாளியை கொலை செய்த குற்றவாளி கைது

  • December 20, 2023
  • 0 Comments

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளியைக் கொலை செய்து உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துச் சென்ற சந்தேகநபர் சம்மாந்துறை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் நேற்று (19) இரவு சம்மாந்துறை நகரில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த வேளையில் கைது செய்யப்பட்டமை குறித்து ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதாக ஹட்டன் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் ஜயசேன தெரிவித்தார். சந்தேகநபர் ஹட்டன் பிரதேசத்தில் பல நாட்களாக தங்கியிருந்து கடந்த 09 ஆம் திகதி […]

இலங்கை

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

  • December 20, 2023
  • 0 Comments

2023 ஆம் ஆண்டுக்கான எந்தவொரு மின்சார சபை ஊழியர்களுக்கும் போனஸ், சம்பள அதிகரிப்பு அல்லது ஊக்கத்தொகை வழங்கப்படக்கூடாது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர்  காஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அத்துடன், மின்சார சபை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பல்வேறு ஊக்கத்தொகைகள் மற்றும் கொடுப்பனவுகள் பற்றிய தகவல்களை வழங்குமாறும், வாடகையாக செலுத்தப்பட்ட பணம் மற்றும் அதிகாரிகள் வாடகைக்கு எடுத்த வாகனங்கள் குறித்த அறிக்கையை வழங்குமாறும் அமைச்சர் மின்சார சபைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வட அமெரிக்கா

தேர்தலில் போட்டியிட டிரம்ப்புக்கு தகுதியே இல்லை- அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

  • December 20, 2023
  • 0 Comments

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை டொனால்டு டிரம்ப் இழந்துவிட்டதாக கொலராடோ மாகாண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (77). இவர் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவியில் இருந்தார். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் தோல்வியை தழுவினார். இதனால் அவரது ஆதரவாளர்கள் கடந்த 2021 ஜனவரி 6ம் திகதி அன்று வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற […]

இலங்கை

இலங்கையில் போலி விசா தயாரிக்கும் இடமொன்று முற்றுகை!

  • December 20, 2023
  • 0 Comments

குருநாகல் – பன்னல பகுதியில் போலி விசா தயாரிக்கும் மையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த இடம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

இலங்கை

இலங்கை : மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

  • December 20, 2023
  • 0 Comments

சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்ட  யோசனைகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் ஜனவரி 1ஆம் திகதி முதல் கடுமையான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுவில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, நாடு சிறப்பு மருத்துவர்கள் உட்பட 1,700 க்கும் மேற்பட்ட மருத்துவர்களை இழந்துள்ளதுடன், […]

இலங்கை

இலங்கை – உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு!

  • December 20, 2023
  • 0 Comments

2023 ஆம் ஆண்டுக்கான APOSA உயர்தரப் பரீட்சை தொடர்பான ஆதரவு வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள் நடத்துவது டிசம்பர் 29 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடையும் என்று பரீட்சை திணைக்களம் அறிவிக்கிறது. அதன்படி, தடையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்துவதற்கு இலங்கை […]

பொழுதுபோக்கு

நடிகை ஹேமா சவுத்ரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

  • December 20, 2023
  • 0 Comments

பழம்பெரும் நடிகையும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கல்லூரி தோழியுமான ஹேமா சவுத்ரி மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பழம்பெரும் கன்னட நடிகை ஹேமா சவுத்ரி, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகை ஹேமா சவுத்ரிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மயங்கிய நிலையில் பெங்களூரு பாப்டிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் […]

ஆசியா

சீனாவை அச்சுறுத்திய நிலநடுக்கம் – மீட்புப் பணிகள் தீவிரம்

  • December 20, 2023
  • 0 Comments

சீனாவின் வடமேற்கில் உள்ள கான்சு (Gansu) மாநிலத்தை உலுக்கிய நிலநடுக்கத்தில் மாண்டோர் எண்ணிக்கை 127ஆக அதிகரித்துள்ளது. 700க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 2ஆவது நாளாக தேடல், மீட்புப் பணிகள் தொடருகின்றன. கூடுதல் ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் அந்தப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மரண எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கான்சு மாநிலத்தில் சுமார் 150,000 வீடுகள் நிலநடுக்கத்தால் சேதமடைந்துள்ளன. வீடுகளை இழந்த குடியிருப்பாளர்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கம் மிக மோசமாக உலுக்கிய டஹேஜியா (Dahejia) நகரில் உணவு, போர்வை, […]

error: Content is protected !!