இலங்கை செய்தி

கப்பல் பாதுகாப்பு குழுக்களின் நடவடிக்கை குறித்து இலங்கை மீளாய்வு

இலங்கை கடற்படையின் கப்பல் பாதுகாப்புக் குழுக்கள் (Onboard Security Team - OBST) தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் நிதி முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கான விசேட கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இலங்கை கடற்படையின் கப்பல் பாதுகாப்புக் குழுக்கள் (Onboard Security Team – OBST) தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் நிதி முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கான விசேட கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், காலி பெட்டிகலவத்த ஆயுதக் களஞ்சிய வளாகத்திற்கு அண்மையில் அவர் மேற்கொண்ட ஆய்வின்போது கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் எழுப்பப்பட்ட கேள்விகள் தொடர்பில் முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டன.

வணிகக் கப்பல்களில் பணியாற்றும் வெளிநாட்டு தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களைச் சேமித்து வைக்கும் இடமாக இந்த வளாகம் செயல்படுகின்றது. இதற்கான சேவைகளை இலங்கை கடற்படை வழங்கி வருகின்றது.

ஆய்வின்போது கண்டறியப்பட்ட குறைபாடுகள், அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள், கப்பல் பாதுகாப்புக் குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் நிதி முன்னேற்றம், வருவாயை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டன.

இந்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாகவும் தடையின்றியும், திறமையான முறையிலும் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலைப் பேணுவதுடன், முறையான செயற்பாட்டு மற்றும் நிதி நிர்வாகத்தை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை