இலங்கை

யாழ் பல்கலைக்கழகத்திற்கு அரைக் காற்சட்டையுடன் நுழைய முற்பட்டவர்களால் பரபரப்பு!

  • December 20, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் நபரொருவர் அரைக் காற்சட்டையுடன் நுழைய முற்பட்டமை சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழாவின் சில திரைப்படங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் திரையிடப்படுகிறது. இந்நிலையில் அரைக் காற்சட்டையுடன் வந்த ஒருவர் திரைப்படத்தை பார்வையிட பல்கலைக்கழகத்திற்கு உள்ளே அனுமதிக்குமாறு கோரவே பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதனை மறுத்து அரைக் காற்சட்டையுடன் நுழைய முடியாது என பல்கலைக்கழக நடைமுறையை கூறினர். இதன்போது அரைக் காற்சட்டையுடன் வந்தவருடன் உடனிருந்த சிலர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பாட்டில் […]

இலங்கை

யாழில் பெய்துவரும் மழை யினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக 435 குடும்பங்களைச் சேர்ந்த 1523 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 24 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். சங்கானை பிரதேச செயலக பிரிவில் 214 குடும்பங்களைச் சேர்ந்த 267 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 146 குடும்பங்களைச் சேர்ந்த 485 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 205 பேரும், கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் […]

இலங்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி மாவட்ட விவசாய குழுக் கூட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாடு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் விவசாய துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் இக் கூட்டத்தில் முன்கொண்டு வரப்பட்டு விரிவாக ஆராயப்பட்டன. நீர்ப்பாசன குளங்களின் தற்போதைய நிலைமைகள், காலபோக பயிர்ச் செய்கை, துறை சார்ந்து தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. இதனைவிட நெற்செய்கையில் வெண்முதுகு தத்தி […]

இலங்கை

முல்லைத்தீவில் படிபடியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் மக்கள்!

  • December 20, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2113 குடும்பங்களை சேர்ந்த 6268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மழை சற்று குறைவாக காணப்படுகின்ற நிலைமையில் வெள்ள நீர் வடிந்தோடி வருகின்றதனால் இடைத்தங்கல் முகாம்களில் இருந்த மக்கள் தங்களுடைய வீடுகளுக்கு சென்று வீடுகளை துப்புரவு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையிலே ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் புளியங்குளம் பண்டாரவன்னி கூழாமுறிப்பு பேராறு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கி இருந்த மக்கள் நேற்று […]

பொழுதுபோக்கு

BOSS-ஆ இல்ல PUZZLE-ஆ? தளபதி 68 தயாரிப்பாளர் கொடுத்த ஸ்பெஷல் அப்டேட்

  • December 20, 2023
  • 0 Comments

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்தின் டைட்டில் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில், அதுகுறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம் அளித்துள்ளார். லியோ படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய் உடன் சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, வைபவ், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், கஞ்சா கருப்பு, பிரேம்ஜி, ஜெயராம், […]

இலங்கை

யாழில் பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரம் : 06 இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை அவர்களிடம் போதைப்பொருளை கொள்வனவு செய்த 15 மாணவர்கள் அடையாளங்காணப்பட்டு , அவர்களை பொலிஸார் கடுமையாக எச்சரித்ததுடன் , போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை வழங்கி பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் குறித்த தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட , யாழ்.புறநகர் […]

ஐரோப்பா

ரஷ்யாவை சீர்குலைக்கும் வெளிநாட்டு முயற்சி: ‘கடுமையான’ பதிலடிக்கு புடின் அழைப்பு

உக்ரைனுக்கு உதவி செய்வதன் மூலம் ரஷ்யாவை சீர்குலைக்கும் வெளிநாட்டு முகவர்களுக்கு “கடுமையான” பதிலடி கொடுக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். கிய்வ் ஆட்சி வெளிநாட்டு சிறப்பு சேவைகளின் நேரடி ஆதரவுடன் பயங்கரவாத முறைகளின் பாதையை எடுத்துள்ளது, நடைமுறையில் அரச பயங்கரவாதம்” என்று புடின் ஒரு வீடியோ உரையில் கூறியுள்ளார். ரஷ்யாவில் அரசியல் மற்றும் சமூக நிலைமையை சீர்குலைக்கும் வெளிநாட்டு சிறப்பு முகவர்களின் முயற்சிகள் கடுமையாக நிறுத்தப்பட வேண்டும், என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கை

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் பலி!

  • December 20, 2023
  • 0 Comments

கிளிநொச்சியில் நேற்று (19.12) பிற்பகல் இடம்பெற்ற ரயில் விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி புகையிரதம் ஆனந்தபுரம் பகுதியில் உள்ள புகையிரத கடவை வீதியை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிள் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசியா

இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல்களுக்கு தடைவிதிக்கும் மலேசியா!

  • December 20, 2023
  • 0 Comments

இஸ்ரேலுக்கு சொந்தமான கொடியிடப்பட்ட கப்பல்கள் மற்றும் இஸ்ரேலின் கப்பல்களை மலேசிய துறைமுகத்தில் நிறுத்த தடை விதிப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முடிவு உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸுடனான போரில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடந்து வரும் கொடுமைகளை காரணம் காட்டி, மனிதாபிமான கொள்கைகளை இஸ்ரேல் புறக்கணித்து, சர்வதேச சட்டத்தை மீறியதன் எதிரொலியாக இந்த தடை […]

ஐரோப்பா

ஏழாவது முறையாக இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் ரிஷி சுனக் அரசாங்கம்!

  • December 20, 2023
  • 0 Comments

பிரித்தானிய ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினரான பீட்டர் போன், நேற்று பதவிநீக்கம் செய்யப்பட்ட பிறகு வெற்றிடத்தை நிரப்ப மீண்டும் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீட்டர் போனின் தவறான நடத்தை காரணமாக அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அவருடைய வெற்றிடத்தை நிரப்ப ரிஷி சுனக் தலைமையிலான அரசாங்கம் சவாலான வாக்கெடுப்பு ஒன்றுக்கு முகங்கொடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனக்கின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி ஜூலை தொடக்கத்தில் இருந்து அதன் ஏழாவது இடைத்தேர்தலை எதிர்கொள்கிறது. […]