செனகல் கடற்கரைக்கு அப்பால் புல்பெயர்ந்தோர் பயணித்த படகு விபத்து – 34 பேர் பலி
செனகல் கடற்கரைக்கு அப்பால் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் எத்தனைபேர் நீரில் மூழ்கி காணாமல்போனார்கள் என்பது துல்லியமாக தெரியவரவில்லை என மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்பெயினின் கேனரி தீவுகளை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சிரிய மரப் படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை ஜனவரி முதல் மே 2026 வரை கேனரி தீவுகளை நோக்கிச் சென்ற 635 பேர் உயிரிழந்ததாக ஸ்பானிய புலம்பெயர்ந்தோர் உரிமைக் குழுவான ‘வாக்கிங் பார்டர்ஸ் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




