ஐரோப்பா

பிரான்ஸில் இடம்பெற்ற சைபர் தாக்குதல்கள் – ஈரான் மீது சந்தேகம்

பிரான்ஸ் முழுவதும் உள்ள வணிக குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் உறைவிப்பான்களைச் செயலிழக்கச் செய்த இணையவழித் தாக்குதல்களுக்குப் பின்னால் ஈரான் அரசின் ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் இருக்கலாம் என பிரெஞ்சு அதிகாரிகள் சந்தேகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் இது தொடர்பில் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகமும் பாரிஸ் வழக்கறிஞர் அலுவலகமும் உடனடியாகப் பதிலளிக்கவில்லை என ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும் தீங்கிழைக்கும் இணையவழிச் செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை என ஈரான் மறுத்து வருகிறது.

சமீபத்தில் பிரான்ஸ் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் குளிர்சாதன பெட்டிகள் ஹேக் செய்யப்பட்டு அதன் வெப்பநிலை 50 பாகை செல்ஸியசை விட அதிகரிக்க செய்யப்பட்டது.

இதன்காரணமாக பல உணவு பொருட்கள் பழுதடைந்ததுடன், சூப்பர் மார்கட் உரிமையாளர்கள் பேரிழப்பை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்