ஜப்பானில் எரிமலை வெடிப்பால் உருவான புதிய தீவு – வெளிவந்த பல முக்கிய தகவல்கள்
தெற்கு ஜப்பானில் ஐவோ ஜிமாவுக்கு 1 கிமீ தூரத்தில் கடலுக்கடியில் உள்ள எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து கடற்பரப்பில் புதிதாக தீவு ஒன்று உருவாகியுள்ளது. பெயரிடப்படாத எரிமலை மூன்று வாரங்களுக்கு முன்பாக வெடிக்கத் தொடங்கியது. வெடிப்பு நிகழ்ந்த 10 நாள்களுக்குள் எரிமலை சாம்பலும் பாறைகளும் ஆழமில்லாத கடற்பரப்பில் சேகரமாகி அதன் முனை கடலுக்கு மேலாக உயர்ந்து தீவு போல காட்சியளிக்கிறது. நவம்பர் தொடக்கத்தில் உருவான இந்த நிலம், 100 மீட்டர் விட்டம் கொண்டதாகவும் 20 மீட்டர் உயரத்தோடும் எழுந்துள்ளது. […]













