உலகம்

உக்ரைன் தலைநகர் கெய்வில் பயங்கர தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கெய்வ் சில மாதங்களில் பின்னர் முதல் முறையாக பெரிய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்று நகர மேயர் தெரிவித்துள்ளார். வெடிச்சத்தம் கேட்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கிய்வ் மற்றும் அருகிலுள்ள பகுதிக்கான வான்வழி எச்சரிக்கைகள் அறிவிக்கப்பட்டன, மேலும் நகர அதிகாரிகள் தங்குமிடங்களில் தங்குமாறு குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளனர். உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை

பொழுதுபோக்கு

“லூசிபர் 2 எம்புரான்” தீ தெறிக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

  • November 11, 2023
  • 0 Comments

2019-ம் ஆண்டு நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான படம் ‘லூசிபர்’. இப்படத்தின் மூலம் பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். இதில் நடிகர் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘லூசிபர் 2 எம்புரான்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தை லைகா மற்றும் ஆசீர்வாத் சினிமாஸ் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் திரைக்கதையை முரளி கோபி எழுத, சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் […]

வட அமெரிக்கா

1250 அடி உயர எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் மீது ஏறி இசைக்கலைஞர் புதிய சாதனை

  • November 11, 2023
  • 0 Comments

அமெரிக்காவிலுள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடத்தில் ஒற்றை நபராய் ஏறி சாதனை படைத்திருக்கிறார் ஜேரட் லெட்டோ என்னும் இசைக்கலைஞர். சட்ட அனுமதியுடன் ஏறிய முதல் நபர் என்ற வகையிலும் இவர் பெருமை பெற்றிருக்கிறார். நடிகர், இசைக்கலைஞர் எனப் பன்முகம் கொண்டவர் ஜேரட் லெட்டோ. ’தர்ட்டி செகண்ட்ஸ் டு மார்ஸ்’ என்னும் இசைக்குழுவின் அங்கத்தினரான இவர், அடுத்த மார்ச்சில் திட்டமிட்டுள்ள தங்களது இசை உலகப்பயணத்தை விளம்பரப்படுத்தும் வகையில் எம்பயர் ஸ்டேட் கட்டடத்தில் ஏறியிருக்கிறார். நியூயார்க் நகரிலுள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடம், […]

இலங்கை

பொதுஜன பெரமுனவிற்கு புதிய தலைமைத்துவத்தை உருவாக்க திட்டம்!

  • November 11, 2023
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன புதிய அரசியல் கூட்டமைப்பை உருவாக்குவது மற்றும் பொருத்தமான தலைமைத்துவத்தை நியமிப்பது குறித்து டிசம்பர் மாத நடுப்பகுதிக்குள் தீர்மானிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுஜன பெரமுனவின் இரண்டாவது பொது மாநாட்டை டிசம்பரில் நடத்தவும் அதற்கு முன்னதாக இந்த புதிய கூட்டணியின் தலைமையை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால் அது தொடர்பான பல முக்கிய முடிவுகள் இந்த மாநாட்டில் எடுக்கப்பட உள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் […]

உலகம்

இத்தாலிய புகலிட மையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து: 30க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

மத்திய இத்தாலியில் புகலிடக் கோரிக்கையாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 31 பேர் காயமடைந்துள்ளதாக தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது. “அநேகமாக வாயு கசிவு காரணமாக இருக்கலாம்” இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. ஆபத்தான நிலையில் இருந்த ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் ரோம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது கோமா நிலையில் இருப்பதாக அன்சா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஐரோப்பா

காதலியை 111 முறை கத்தியால் குத்தி சித்திரவதை செய்து கொன்ற ரஷ்யருக்கு மன்னிப்பளித்த அதிபர் புடின்

  • November 11, 2023
  • 0 Comments

உக்ரைனில் போரில் ஈடுபட முடிவு செய்ததை அடுத்து, கொடூர குற்றவாளி ஒருவருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். தனது முன்னாள் காதலியை கொடூரமாக கொன்றதற்காக விதிக்கப்பட்ட 17 வருட சிறைத்தண்டனையை விளாடிஸ்லாவ் கன்யூஸ் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே அனுபவித்துள்ளார். காதலை முறித்துக் கொண்ட ஆத்திரத்தில் கன்யூஸ் தனது முன்னாள் காதலியை சீரழித்து, 111 முறை கத்தியால் குத்தி மூன்றரை மணி நேரம் சித்திரவதை செய்துள்ளார். பின்னர் அவர் ஒரு கேபிள் இரும்பினால் குறித்த பெண்ணின் […]

ஆசியா

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் பதிவு!

  • November 11, 2023
  • 0 Comments

பாகிஸ்தானில் இன்று (11.11) 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 10 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இலங்கை

யாழ். கொடிகாமம் பகுதியில் தனியார் பேரூந்துடன் மோதி விபத்துக்குள்ளான கூலர் வாகனம்

  • November 11, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இன்று காலை குறித்த விபத்து கொடிகாமம் புத்தூர் சந்தி இடையே இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்த பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த வாகனமும் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. கூலர் வாகன சாரதி படு காயமடைந்துள்ள நிலையில் ஏனையவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.

மத்திய கிழக்கு

தொடக்கியது ஹமாஸ் முடித்து வைக்க போவது இஸ்ரேல் தான் – பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

  • November 11, 2023
  • 0 Comments

போரை இஸ்ரேல் தொடங்கவில்லை. ஹமாஸ் தான் எங்கள் மீது முதலில் தாக்குதல் நடத்தினர். ஆனால் போரை நாங்களே முடித்து வைப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது காசா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்து ஒரு மாதத்துக்கும் மேலாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் 11 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் […]

இலங்கை

நல்லூர் கந்தசஷ்டி உற்சவ காலத்தையொட்டி ஆலய சுற்று வீதி தடைசெய்யப்படவுள்ளது

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெறவுள்ள கந்தசஷ்டி உற்சவ காலத்தையொட்டி வீதிகள் தடை செய்யப்படவுள்ளன என்று யாழ் மாநகர சபை அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் 17 திகதி வரை மற்றும் 19 ஆம் திகதிகளில் பிற்பகல் 5 மணி தொடக்கம் 6 மணிவரையும் 18 ஆம் திகதி சூரன்போரன்று நண்பகல் 12 மணி தொடக்கம் இரவு 7 மணிவரையும் ஆலய சுற்று வீதி தடைசெய்யப்படவுள்ளது. பொது மக்கள் வீதியைப் பயன்படுத்துவோர் மாற்றுப் பாதைகளை […]