ஐரோப்பா

பிரான்ஸில் மாணவர் போராட்டத்தில் வன்முறை வெடிப்பு – 11 பொலிஸார் மருத்துவமனையில்

பாரிஸில் நேற்று இடம்பெற்ற மாணவர்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.

தலைநகரின் 7-வது நிர்வாகப் பிரிவில் (arrondissement) உள்ள ‘லெஸ் இன்வாலிட்ஸ்’ (Les Invalides) பகுதிக்கு அருகிலுள்ள ‘பிளேஸ் வௌபன்’ (Place Vauban) என்ற இடத்தில் மக்கள் பொலிஸார் மீது வெற்று போத்தல்கள் மற்றும் பட்டாசுகள் மற்றும் கற்களை வீசியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் போராட்டக்காரர்கள் மீது நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்புகைக்குண்டுகளை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே நேற்றைய சூழ்நிலை மிகவும் கடினமான அமைந்ததாக நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சுமார் 11 பொலிஸார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

“பொலிஸ் துறையை  தாக்கும் வன்முறையாளர்கள் மீதான எனது உறுதியான எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்,” என்று அவர் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நேற்றைய போராட்டத்தை ஒடுக்க பொலிஸார் ‘ஸ்டன் கிரனேட்’ (stun grenades) எனப்படும் தற்காலிக குண்டுகளை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரான்சில் இத்தகைய குண்டுகளின் பயன்பாடு குறித்துக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இம்மாதத் தொடக்கத்தில் பள்ளிக்கு வெளியே நடைபெற்ற காவல்துறை நடவடிக்கையின்போது 15 வயது மாணவர் ஒருவர் தனது கையை இழந்ததைத் தொடர்ந்து, குறிப்பிட்ட வகை குண்டுகளின் பயன்பாட்டை அரசு இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்