முன்னறிவிப்பின்றி தாக்குதல் நடத்திய ரஷ்யா : வொஷிங்டன் மீது விழும் குற்றச்சாட்டு
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டிய நிலையில், வொஷிங்டன் தொடர்ந்து உளவு தகவல்களை உக்ரைனுடன் பகிர்ந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ரஷ்ய படைகள் உக்ரைனின் அனல் மின் நிலையத்தைக் குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக கீவ் தெரிவித்துள்ளது.
இதில் இருவர் உயிரிழந்ததாக மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பில் டெலிகிராமில் கருத்து வெளியட்ட ஜெலன்ஸ்கி, “மீண்டும் ஒருமுறை, எங்கள் கூட்டாளிகளிடமிருந்து எந்த முன்னறிவிப்பும் இல்லை,” என்று ஏன் முன்னறிவிப்பு வழங்கப்படவில்லை எனக் கூறினார்.
அத்துடன் ரஷ்யர்கள் மேலும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் செலுத்தத் தயாராகி வருகின்றனர்,” என்று கூறிய அவர், ட்ரம்பின் எரிசக்தி போர்நிறுத்தத்திற்கு ரஷ்யா கட்டுப்படவில்லை என்பதை இந்தத் தாக்குதல்கள் காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
ஜெலன்ஸ்கியின் இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், வொஷிங்டன் உக்ரைனுடன் தொடர்ந்து உளவுத் தகவல்களைப் பகிர்ந்து வருவதாகவும், போரை முடிவுக்குக் கொண்டுவர கீவ் மற்றும் மொஸ்கோ ஆகிய இரு நாடுகளுடனும் இணைந்து பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.




