உலகம்

அப்பாஸ் அராக்சியை தொடர்ந்து சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்த அமெரிக்க குழு!

ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியின் சீனப் பயணத்தைத் தொடர்ந்து, அமெரிக்க செனட் சபை  பிரதிநிதிகள் குழு ஒன்று பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயைச் (Wang Yi ) இன்று சந்தித்துள்ளது.

அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் இந்தப் பயணம், வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பிரதிநிதிகள் குழுவிற்குத் தலைமை தாங்கும் குடியரசுக் கட்சி செனட்டர் ஸ்டீவ் டைன்ஸ், பெய்ஜிங்கிற்கும் வொஷிங்டனுக்கும் இடையிலான உறவுகளில் “ஸ்திரத்தன்மை மற்றும் பரஸ்பர மரியாதை” நிலவ வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இதேவேளை நேற்று அப்பாஸ் அராக்சியின் சந்திப்பை தொடர்ந்து ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று வாங் அழைப்பு விடுத்தார்; அப்போராட்டத்தை அவர் “சட்டவிரோதமானது” என்று விவரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!