தென்கொரியாவின் முன்னாள் பிரதமர் ஹான் டக்-சூவின் தண்டனைக்காலம் குறைப்பு!
தென்கொரியாவின் முன்னாள் பிரதமர் ஹான் டக்-சூவின் (Han Duck-soo ) தண்டனைக் காலம் குறைக்கப்பட்டுள்ளது.
யூன் சுக் இயோல் ஆட்சி காலத்தில் இராணுவ சட்டத்தை தவறாக பிரயோகித்தபோது அவருக்கு ஆதரவாக செயற்பட்டமை தொடர்பில் ஹானுக்கு 23 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 15 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
இராணுவச் சட்டத்தை அமல்படுத்தியதில் முன்னாள் பிரதமர் ஹான் டக்-சூவின் (Han Duck-soo ) பங்கு தொடர்பாக, தென் கொரிய மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் மேற்படி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
யூன் இராணுவச் சட்டத்தை அறிவிக்க உதவுவதற்காக ஹான் முக்கிய செயல்களில் ஈடுபட்டார் என்றும், அவரைத் தடுக்கவில்லை என்றும் மேல் நீதிமன்றம் உறுதிப்பட தெரிவித்துள்ளது.
பிரதமராக, பிரதிவாதிக்கு அதிபரின் தவறான அதிகாரப் பிரயோகத்தைக் கட்டுப்படுத்தி, அவர் சட்டப்பூர்வமாகத் தனது அதிகாரத்தைச் செயல்படுத்த உதவுவதற்குப் பொறுப்பு இருந்தது,” என்று தலைமை நீதிபதி இதன்போது வலியுறுத்தினார்.
இருப்பினும், நிதி அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தில் வகித்த பதவிகள் உட்பட, ஹானின் 50 ஆண்டுகால பொது சேவைப் பணியைக் கணக்கில் எடுத்துக்கொண்டு மேற்படி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




