உலகம் முக்கிய செய்திகள்

ட்ரம்பின் அணுவாயுத குறைப்பு திட்டம் – அதிருப்தியில் சீனா

சீனாவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள சந்திப்பொன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி மற்றும் ரஷ்ய ஜனாதிபதியுடன் அணுவாயுத குறைப்பு தொடர்பில் கலந்துரையாடுவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

நவம்பர் 19 ஆம் திகதி இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

இதன்போது “உலக அளவில் அணு ஆயுதங்களைக் குறைப்பது குறித்து அவர் விவாதிப்பார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அணு ஆயுதங்களின் பெருக்கம் மிகவும் ஆபத்தானது என்று ட்ரம்ப் கருதுவதாகவும், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒலிவியா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே ட்ரம்பின் இந்த கூற்றால் சீனா அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய அணு ஆயுதக் கையிருப்புகளைக் கொண்ட ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடன், அணு ஆயுதங்கள் குறித்துப் பேசுவதற்கான முயற்சிகளை சீனா நிராகரித்து வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,