இந்தியா இலங்கை செய்தி

இலங்கை, இந்தியா கூட்டு ராணுவப் பயிற்சி ஆரம்பம்

இந்தியா-இந்தியா இடையிலான 12-வது கூட்டு இராணுவப் பயிற்சியான “மித்ர சக்தி XII – 2026” மாதுரு ஓயாவில் நேற்று ஆரம்பமாகியுள்ளது. இந்தப் பயிற்சி நவம்பர் 13 முதல் 26 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்தியா-இந்தியா இடையிலான 12-வது கூட்டு இராணுவப் பயிற்சியான “மித்ர சக்தி XII – 2026” மாதுரு ஓயாவில் நேற்று ஆரம்பமாகியுள்ளது. இந்தப் பயிற்சி நவம்பர் 13 முதல் 26 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டுப் பயிற்சியானது, வான்வழி ஆதரவு மற்றும் பிற அத்தியாவசியப் போர் அணிகளை ஒருங்கிணைத்து, கிளர்ச்சி எதிர்ப்புச் சூழலில் பற்றாலியன் அளவிலான போர்க் குழுவின் தந்திரோபாயச் செயற்பாடுகளில் கவனம் செலுத்தப்படும் என சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.

இந்தப் பயிற்சியானது, இரு படைகளும் தந்திரோபாய நிபுணத்துவத்தைப் பரிமாறிக்கொள்ளவும், செயற்பாட்டுத் திறன்களைச் செம்மைப்படுத்தவும், போர்க்களத்தில் ஒருங்கிணைந்து செயற்படும் திறனை மேம்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்கும்.

கிழக்குப் படைகளின் தளபதியான மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.என்.கே.டி. பண்டாரவின் மேற்பார்வையில் இந்த பயிற்சி இடம்பெறுகிறது.

இதில், காலாட்படை, கவசப்படை, பீரங்கிப்படை, பொறியியல் படைப்பிரிவு, சமிக்ஞைப் படை, இயந்திரமய காலாட்படை, மருத்துவப் படை, மின்சார மற்றும் இயந்திரப் பொறியியலாளர்கள், இராணுவக் காவல்துறை, பெண்கள் படை மற்றும் சிறிலங்கா விமானப்படை ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 17 அதிகாரிகள் மற்றும் 153 படையினர் பங்கேற்கின்றனர்.

இந்தப் படைக்கு விஜயபாகு காலாட்படைப் படைப்பிரிவின் 1-வது பட்டாலியனைச் சேர்ந்த மேஜர் ஏ. வசல தலைமை தாங்குகிறார்.

இந்தியப் பயிற்சிப் பிரிவில், ராஜ்புதானா ரைபிள்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த 19 அதிகாரிகள் மற்றும் 150 இதர வீரர்கள் இடம்பெறுவார்கள். இப்படைக்கு ராஜ்புத்தானா துப்பாக்கிப் படைப்பிரிவின் லெப்டினன்ட் கேணல் அனிருத் மங்கோத்ரா தலைமை தாங்குகிறார்.

கட்டுப்பாட்டுப் பயிற்சி மற்றும் துணைப் பிரிவுகளுடன் சேர்த்து, 650-க்கும் மேற்பட்ட படையினர் இந்த முக்கிய இருதரப்பு இராணுவ பயிற்சியில் பங்களிப்பார்கள் .

இந்தப் பயிற்சியில் பங்கேற்கும் இந்திய இராணுவப் படைப்பிரிவு நேற்று மத்தல விமான நிலையத்தை வந்தடைந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆணைக்கு உட்பட்டு, கூட்டு தந்திரோபாய பயிற்சிகள் மற்றும் வழக்கத்திற்கு மாறான செயற்பாடுகளில் (sub-conventional operations) கவனம் செலுத்தும் இந்தப் பயிற்சி, இந்தியா மற்றும் சிறிலங்கா ஆயுதப் படைகளுக்கு இடையிலான செயல்பாட்டு ஒருங்கிணைப்பு, ஒன்றிணைந்து செயற்படும் திறன் மற்றும் பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தும் என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இது, அரை-நகர்ப்புற சூழல்களில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான இரு நாடுகளின் கூட்டுத் திறனை மேம்படுத்தும்.

இந்தப் பயிற்சியானது, பிராந்திய அமைதி, உறுதித்தன்மை மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் உள்ள பொதுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது என்றும் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை