இந்தோனேசியாவில் ரயில் விபத்து; 14 பேர் பலி
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே இரு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் படுகாயமடைந்த 80 இற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, ரயில் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்கும் பணியும் நடைபெற்றுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.





