உலகம் செய்தி

ஹிஸ்புல்லா அமைப்பின் இரும்புக் கோட்டைகள் அழிப்பு!

தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பிற்குச் சொந்தமான ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்கட்டமைப்புகளை இஸ்ரேலிய ராணுவம் தாக்கி அழித்துள்ளது.

ஆயுத களஞ்சியசாலை, வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்த கட்டிடங்கள் உள்ளிட்டவையே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன என்று இஸ்ரேல் இன்று (28) தகவல் வெளியிட்டுள்ளது.

அதேபோல ஏனைய சில இடங்களில் ஏராளமான துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் போன்ற போர் தளவாடங்களை இஸ்ரேலியப் படைகள் கைப்பற்றியுள்ளன.

காசாவில் செயல்பட்ட Bislamach படைப்பிரிவே தற்போது தெற்கு லெபனானில் களமிறங்கி, அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கிடையில் போர் நிறுத்தம் அமுலில் உள்ளது எனக் கூறப்பட்டாலும் இஸ்ரேல் லெபனான்மீது தாக்குதல்களை நடத்திவருகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!