உலகம்

இந்தோனேசியாவில் விமான சேவைகள் முடக்கம் – 30000 பயணிகள் தவிப்பு

  • September 7, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவின் அனாக் கிரகடாவ் எரிமலை, வெடிப்பின் தாக்கம் காரணமாக விமான சேவைகள் இரண்டாவது நாளாகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக நேற்றைய தினம் சுமார் 340,000-க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையங்களில் சிக்கித் தவித்ததாக கூறப்படுகிறது. ஜகார்த்தாவின் சுகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தின் வான்வெளிக்கு அருகில் இருப்பதால் சேவைகளை முன்னெடுப்பதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளது. இதனால் சுமார் 3000 விமானங்கள் நேற்றைய தினமும் இரத்து செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் பயணிகள் பணத்தைத் திரும்பப் பெறவும், எப்போது பயணிக்க முடியும் என்பது குறித்த […]

உலகம்

இந்தோனேசியாவின் எரிமலை வெடிப்பு – விமான சேவைகள் பாதிப்பு

  • September 6, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் எரிமலை வெடித்ததை தொடர்ந்து இன்று விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 08 விமான நிலையங்கள் விமானச் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிமலைச் சாம்பல்  , சுகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையம் வரை வியாபித்ததாக கூறப்படுகிறது. மேலும் எரிமலை செயற்பாடு மற்றும் சாம்பல் வெளியேற்றம் காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன், மீன்பிடி செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஜகார்த்தாவின் பிரதான விமான நிலையத்தில் மட்டும் 964 விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. எட்டு […]

உலகம்

இந்தோனேசியாவில் உணவு நஞ்சாதல் – 777 மாணவர்கள் பாதிப்பு

  • September 3, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில், அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளடங்களாக 777 பேருக்கு உணவு நஞ்சூட்டல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாடசாலையின் அதிபர் இன்று இந்த தகவலை வெளியிட்டார். இதன் மூலம், இந்தத் திட்டத்தால் நோய்வாய்ப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று நாட்களில் 1,700-ஐத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய உணவு நஞ்சூட்டல் காரணமாக 950 இந்தோனேசியர்கள் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்காக, ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ Prabowo […]

உலகம்

இந்தோனேசியாவின் புளோரஸ் பகுதியில் மற்றொரு நிலநடுக்கம் பதிவு

  • August 17, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி 51 பேர் உயிரிழந்ததைத் தொர்ந்து மற்றுமொரு நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது. ஏற்கனவே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட புளோரஸ் பகுதியில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று பதிவாகியுள்ளது. இது சுமார் 10 கி.மீ ஆழத்தில், மையம் கொண்டிருந்ததாக ஜெர்மனியின் GFZ புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியிடப்படவில்லை.

உலகம்

இந்தோனேசியாவின் புரோமோ மலை தேசியப் பூங்கா காலவரையறையின்றி மூடப்படுகிறது

  • August 9, 2026
  • 0 Comments

கிழக்கு ஜாவாவில் உள்ள புரோமோ மலை தேசியப் பூங்காவை ( Bromo national park) மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ பரவலானது எரிமலை நோக்கி விரிவடைந்ததே பூங்காவை மூடக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மூடல் ஆகஸ்ட் 8 மாலை முதல் காலவரையறையின்றி  அமலுக்கு வந்துள்ளது என்று பூங்கா நிர்வாகி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “பார்வையாளர்கள், ஊழியர்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களின் பாதுகாப்பைப் பேணுவதகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி […]

உலகம்

இந்தோனேசியாவில் நடு கடலில் தீப்பிடித்து எரிந்த படகு – ஐவர் வலி, பலர் மாயம்

  • August 2, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவின் மதுரா தீவுக்கு அருகே படகு ஒன்று தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.. இதில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், 41 பேரை காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஜாவா மாகாணத்தின் சுரபயாவிலிருந்து (Surabaya)  தெற்கு சுலவேசியின் (Sulawesi)  மக்காசர்  (Makassar) நகருக்குச் சென்று கொண்டிருந்த படகே இன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. படகில் தீவிபத்து ஏற்பட்டமைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை எனவும், தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீப்பிடித்தபோது அந்தப் படகில் 271 பயணிகள் […]

உலகம்

இந்தோனேசிய வங்கியின் ஆளுநர் பெர்ரி வார்ஜியோ பதவி விலகல்

  • July 27, 2026
  • 0 Comments

இந்தோனேசிய வங்கியின் ஆளுநர் பெர்ரி வார்ஜியோ ( Perry ‌Warjiyo) பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் அரசு செயலக அமைச்சர் பிரசெட்டியோ ஹாடி ( Prasetyo Hadi) இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வார்ஜியோவின் ராஜினாமாவை ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ  ( Prabowo ​Subianto) ஏற்றுக்கொண்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக வார்ஜியோ பதவி விலகியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்தோனேசிய வங்கியின் மூத்த துணை ஆளுநரான டெஸ்ட்ரி தமயந்தி (Destry Damayanti), இடைக்கால ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். […]

உலகம்

முத்தமிட்டதால் நேர்ந்த அவலம் : பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி

  • July 3, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவில் திருமணமாகாத ஜோடிகள் முத்தமிட்டுக்கொண்டிருந்த காணொளி டிக்டொக்கில் வைரலானதை தொடர்ந்து அவர்களுக்கு பொது மக்கள் முன்னிலையில் பிரம்படி வழங்கப்பட்டுள்ளது. காரில் 22 வயதுடைய ஆணும், 25 வயதுடைய பெண்ணும் முத்தமிட்டுக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இஸ்லாமியர்களின் ஷரியா சட்டத்தின் படி அவர்களுக்கு பிரம்படி வழங்கப்பட்டுள்ளது. ஆச்சேவில் உள்ள புஸ்தானுசலாடின் (Bustanussalatin) நகரப் பூங்காவில் அமைக்கப்பட்ட ஒரு மேடையில் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தோனேசியாவில், இஸ்லாமியச் சட்டத்தின் ஒரு வடிவத்தை அமல்படுத்தும் ஒரே மாகாணமாக ஆச்சே […]

உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

  • June 16, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவின் சுலாவேசி தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக இந்தோனேசியாவின் புவி இயற்பியல் நிறுவனமான BMKG தெரிவித்துள்ளது. மேற்படி நிலநடுக்கமானது பாலு நகருக்குத் தென்கிழக்கே சுமார் 42 கிலோமீட்டர் (26.1 மைல்கள்) தொலைவில், 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியாகாத நிலையில் மதிப்பீடு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

 இந்தோனேசியாவில் இலவச உணவு விநியோகத்தில் ஊழல்: 08 கோடி குழந்தைகள் பாதிப்பு!

  • June 5, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவில் ஊட்டச்சத்து திட்டங்களின் கீழ் தினமும் 08 கோடி குழந்தைகளுக்கு உணவளிப்பதாக வழங்கப்பட்ட வாக்குறுதி சந்கேத்திற்கு இடமின்றி மீறப்பட்டுள்ளதும், இந்த திட்டத்தின் கீழ் மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவுகளை உட்கொண்ட பெரும்பாலான குழந்தைகள் சுகவீனம் அடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைய திட்டத்தை மேற்பார்வையிடும் தேசிய ஊட்டச்சத்து முகமையின் தலைவர் டாடான் ஹிண்டயானா (Dadan Hindayana) அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி தன்னை வளப்படுத்திக் கொண்டதன் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதே குற்றச்சாட்டுகளின் […]