உலகம்

அமெரிக்காவின் 17 மாநிலங்களில் பரவியுள்ள நோய் தொற்று

சைக்ளோஸ்போரா கயேடனென்சிஸ் ( Cyclospora cayetanensis) என்ற ஒட்டுண்ணித் தொற்று அமெரிக்காவின் 17 மாநிலங்களில் நூற்றுக்கண்காணவர்களை பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொற்றுகளால் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,   இறப்புகள் பதிவாகவில்லை எனவும்   சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் அதிகபட்சமாக 31 முதல் 80 பேர் வரை இந்த ஒட்டுண்ணித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இல்லினாய்ஸ் (Illinois) மற்றும் டெக்சாஸ்  மாநிலங்களில் தலா 11 முதல் 30 பேரும், மற்ற மாநிலங்களில் 1 முதல் 10 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் எவரும் வெளிநாடு செல்லவில்லை எனத் தெரிவித்துள்ளனர். ஆகவே இந்த தொற்றுக்கள் அசுத்தமான உணவுகள் வழியே பரவியிருக்கக்கூடும் என சுகாதாரத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

மேலும் இந்த தொற்று ஏற்படும் பட்சத்தில் நீர்த்த வயிற்றுப்போக்கு, பசியின்மை, எடை இழப்பு, தசைப்பிடிப்பு, வயிறு உப்புசம், குமட்டல் மற்றும் சோர்வு ஆகியவை  ஏற்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்