செய்தி விளையாட்டு

மெக்சிகோ அபார வெற்றி

கடந்த 40 ஆண்டுகளாக உலகக் கோப்பை Knockout சுற்றுகளில் மெக்சிகோவிற்கு இருந்து வந்த தொடர் தோல்விச் சாபம் முடிவுக்கு வந்துள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘சுற்று-32’ (Round of 32) ஆட்டத்தில், மெக்சிகோ அணி அஸ்டெகா மைதானத்தில், ஈக்வடாரை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம், கடந்த 40 ஆண்டுகளாக உலகக் கோப்பை Knockout சுற்றுகளில் மெக்சிகோவிற்கு இருந்து வந்த தொடர் தோல்விச் சாபம் முடிவுக்கு வந்துள்ளது.

புயல் மற்றும் மோசமான வானிலை காரணமாக இந்த ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் தாமதமானது.

எனினும், ஆட்டம் தொடங்கியதும் போட்டியை நடத்தும் மெக்சிகோ அணி மின்னல் வேகத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஈக்வடார் கோல் பகுதியை நோக்கி அடுத்தடுத்து தீவிரத் தாக்குதல்களைத் தொடுத்தது.

மைதானத்தில் ரசிகர்களின் கரவொலி விண்ணை முட்டிய வேளையில், ஆட்டத்தின் முதல் பாதியின் நடுப்பகுதியில் ஜூலியன் குய்னோனஸ் (Julian Quinones) ஒரு இடி மின்னல் போன்ற ஷாட் மூலம் மெக்சிகோவிற்கு முதல் கோலைப் பெற்றுத் தந்தார்.

பின்னர் அவரே ரவுல் ஜிமினெஸ் (Raul Jimenez) இரண்டாவது கோல் அடிப்பதற்கும் வழிவகுத்தார்.

மெக்சிகோ அணி இதற்கு முன்பு 1986 ஆம் ஆண்டு தங்களது சொந்த நாட்டில் உலகக் கோப்பையை நடத்திய போதுதான் நாகவுட் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. அதன் பிறகு இப்போதுதான் நாகவுட் போட்டியில் வென்றுள்ளது.

மெக்சிகோ அணியின் 17 வயது இளம் வீரர் கில்பர்டோ மோரா (Gilberto Mora) தொடக்க ஆட்டக்காரராகக் களம் இறங்கினார்.

இதன் மூலம் உலகக் கோப்பை நாகவுட் போட்டியில் விளையாடிய பிரேசில் ஜாம்பவான் ‘பெலே’வுக்கு (1958) அடுத்தபடியாக, மிகக் குறைந்த வயதில் களம் கண்ட இரண்டாவது இளம் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

அசைக்க முடியாத பலம்: நடப்பு உலகக் கோப்பையில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகளுடன் சேர்ந்து, லீக் சுற்றின் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று, ஒரு கோல் கூட வாங்காத ஒரே அணியாக மெக்சிகோ திகழ்கிறது.

போட்டியின் 22-ஆவது நிமிடத்தில் மெக்சிகோவின் குய்னோனஸ் பந்தை இடதுபுறமாகக் கடத்திச் சென்று, ஈக்வடார் கோல்கீப்பரால் தடுக்க முடியாத அளவுக்கு ஒரு அசாத்திய கோலை அடித்தார். இதனால் மைதானமே கொண்டாட்டத்தில் மூழ்கியது.

அடுத்த சில நிமிடங்களிலேயே (30-ஆவது நிமிடத்தில்), குய்னோனஸ் கொடுத்த பந்தை உல்வர்ஹாம்டன் அணியின் நட்சத்திர வீரர் ரவுல் ஜிமினெஸ் பெற்று, கோல் போஸ்ட்டின் மேல் மூலைக்கு ஒரு ராக்கெட் வேகத்தில் அனுப்பி இரண்டாவது கோலாக மாற்றினார்.

அஸ்டெகா மைதானத்தில் விளையாடிய கடந்த 10 உலகக் கோப்பை போட்டிகளிலும் மெக்சிகோ தோல்வியே அடையாமல் கம்பீரமாகப் பயணித்து வருகிறது.

1970 மற்றும் 1986 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளை நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அஸ்டெகா மைதானத்தில், மெக்சிகோ தனது அடுத்த ‘சுற்று-16’ (Round of 16) ஆட்டத்தில் இங்கிலாந்து அல்லது காங்கோ குடியரசு அணியை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்ளவுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி