சீனா விநியோக மையங்களை தாக்கினால் பதிலடி கொடுப்பது தொடர்பில் தைவான் போர்பயிற்சி
சீனா விநியோக மையங்களை தாக்கினால் ஆயுத உற்பத்தித் தளங்களை இடமாற்றம் செய்வது மற்றும் பொதுத் தொழிற்சாலைகளை இராணுவப் பயன்பாட்டிற்காக மாற்றுவது ஆகியவற்றை சோதிக்கவுள்ளதாக தைவான் தெரிவித்துள்ளளது.
அடுத்த மாதம் நடைபெறும் வருடாந்திரப் பயிற்சிகளில் இந்த விடயங்களை சோதனை செய்யவுள்ளதாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 5 முதல் 14 வரை நடைபெறும் வருடாந்திர ஹான் குவாங் (Han Kuang) போர்ப் பயிற்சிகளின் ஒரு பகுதியாக இந்தப் பயிற்சியை தைவான் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
இது ஆயுதப் படைகளை உடனடியாகப் போர்த் தயார்நிலையை அதிகரிக்கவும், விரைவான பதில் நடவடிக்கைப் பயிற்சிகளை மேற்கொள்ளவும் தூண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சகத்தின் திட்டமிடல் வரைவின்படி, ஒரு மோதலின்போது தனது ஆயுதப் படைகளுக்குத் தேவையான உற்பத்தியைப் பராமரிக்கும் அதே வேளையில், தைவானால் தொழில்துறை உற்பத்தியைப் பரவலாக்க முடியுமா என்பதை இந்தப் பயிற்சி சோதிக்கும்.




