அமெரிக்க தாக்குதலால் ஈரானில் செயலிழந்த முக்கிய விமான நிலையம்
அமெரிக்கத் தாக்குதலைத் தொடர்ந்து புஷெர் (Bushehr) விமான நிலையம் செயலிழந்துவிட்டது என்று ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா அண்மையில் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள இந்த விமான நிலையம் இயங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
“மக்களின் பயன்பாட்டிற்காகப் புதுப்பிக்கப்பட்டு வாங்கப்பட்ட ஒரு விமானத்தின் எஞ்சிய பகுதிகளை நாங்கள் பார்த்தோம். நேரடியாகத் தாக்கிய ஏவுகணையால் அது முற்றிலும் அழிக்கப்பட்டு, அதன் வால் பகுதி மட்டுமே சேதமின்றி எஞ்சியுள்ளது” எனவும் அவர் கூறியுள்ளார்.




