ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ஜப்பானின் குமாமோட்டோ (Kumamoto) மாகாணத்தில் இன்று சக்திவாய்ந்த நிலடுக்கம் பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது 7.1 ரிக்டர் அளவில் பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக 1 மீட்டர் (3.28 அடி) உயர அலைகள் எழக்கூடும் எனவும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கியூஷு தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ (Kumamoto), நாகசாகி (Nagasaki), ககோஷிமா (Kagoshima), ஃபுகுவோகா (Fukuoka), சாகா (Saga), ஓயிட்டா (Oita) மற்றும் மியாசாகி (Miyazaki) மாகாணங்களுக்கு ஜப்பானிய அரசாங்கம் அவசரகால நிலநடுக்க எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
உலகிலேயே அதிக நிலநடுக்க அபாயம் உள்ள நாடுகளில் ஜப்பானும் ஒன்றாகும்; அங்கு குறைந்தது ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு நில அதிர்வு ஏற்படுகிறது.
பசிபிக் படுகையை பகுதியளவு சூழ்ந்துள்ள எரிமலைகள் மற்றும் கடலடி அகழிகளைக் கொண்ட “நெருப்பு வளையத்தில்” அந்நாடு அமைந்துள்ளதால், உலகில் 6.0 அல்லது அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்களில் சுமார் 20 சதவீதம் ஜப்பானில் நிகழ்கின்றன.





