அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் (Miami International Airport) ஞாயிற்றுக்கிழமை தரையிறங்க முயன்ற அமேசான் பிரைம் எயர் (Amazon Prime Air) நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று ஓடுதளத்தைக் கடந்து சென்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செய்தி

மியாமி விமான நிலையத்தில் Amazon விமானம் விபத்து: ஐந்து பேர் பலி

  • September 7, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் (Miami International Airport) ஞாயிற்றுக்கிழமை தரையிறங்க முயன்ற அமேசான் பிரைம் எயர் (Amazon Prime Air) நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று ஓடுதளத்தைக் கடந்து சென்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர்ட்டோ ரிகோவின் சான் ஜுவான் நகரில் இருந்து புறப்பட்ட பிரைம் எயர் 7598 ரக விமானம், பிற்பகல் 2.00 மணியளவில் மியாமி விமான நிலையத்தின் குறுக்கு ஓடுதளத்தில் தரையிறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்து […]

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என ஈரான் அறிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஈரான் தீவிர முயற்சி

  • September 7, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என ஈரான் அறிவித்துள்ளது. அதேவேளையில், தன் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் வலிமிகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களுடன் தொடங்கிய போர், ஆறு மாதங்களைக் கடந்துள்ள நிலையில் தற்போது எவ்வித முன்னேற்றமுமின்றி முடங்கியுள்ளது. கடந்த ஜூன் மாதம் எட்டப்பட்ட பூர்வாங்க போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததை அடுத்து, அமைதிக்கான தூதரக முயற்சிகளிலும் பெரிய அளவிலான […]

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் நோக்கம் என்ன? இந்தியா இலங்கை செய்தி

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் நோக்கம் என்ன?

  • September 7, 2026
  • 0 Comments

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், செப்ரெம்பர் 8 முதல் 10 ஆம் திகதி வரை இலங்கையில் மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்தப் பயணத்தின் போது, ​​ராஜ்நாத் சிங் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இலங்கை தலைவர்களுடன் கலந்தாலோசனை நடத்தவும், கொழும்பில் உள்ள இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டுள்ளது. அவர், இந்திய பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவிற்குத் தலைமை தாங்குவார். இந்தப் […]

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை செய்தி

இந்தியாவில் இருந்து கடல்வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு

  • September 7, 2026
  • 0 Comments

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, மணல் தீவுகளில் நின்ற 2 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் 5 சிறுவர்கள் அடங்கலாக 11 பேரை மீட்டுத் தலைமன்னார் அழைத்து வந்து தலைமன்னார் பொலிஸாரிடம் நேற்றுமுன்தினம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட இந்த 11 பேரும் மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டு, நேற்று […]

ஈரான் கடற்பரப்பில் அமெரிக்க மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே சனிக்கிழமை பரஸ்பரத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்: பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்கா – ஈரான்

  • September 6, 2026
  • 0 Comments

ஈரான் கடற்பரப்பில் அமெரிக்க மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே சனிக்கிழமை பரஸ்பரத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஈரானின் மூன்று எண்ணெய் விநியோகக் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதுடன், ஹோர்முஸ் நீரிணையில் அனுமதிக்கப்படாத பாதைகளில் பயணித்த மூன்று எண்ணெய் தாங்கிப் படகுகளைத் தாம் இலக்கு வைத்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) இரண்டு அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களை நோக்கிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்து, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மையத்திற்கு அருகிலுள்ள […]

With son Namal away, father Mahinda to take the stage in Anuradhapura on the 12th அரசியல் இலங்கை செய்தி

மகன் நாமலுக்கு பதிலாக 12 ஆம் திகதி மேடேயேறுகிறார் மஹிந்த

  • September 6, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுர பேரணியில் கலந்துகொள்ளவுள்ளதாக அக்கட்சியின் செயல்பாட்டுப் பணிப்பாளர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். நாமல் ராஜபக்ச இல்லாத குறையை தீர்க்கும் வகையில் மகிந்த ராஜபக்ச அனுராதபுரத்திற்கு வருகை தரவுள்ளதாக அவர் கூறினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்யும் மக்கள் பேரணி எதிர்வரும் 12 ஆம் திகதி நிச்சயமாக நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், மஹிந்த ராஜபக்ச உரையாற்றுவதற்காக பிரதான மேடையில் ஏறாமல், மேடைக்கு முன்னால் உள்ள […]

அமெரிக்க கடல்சார் ஆணையத்தின் முக்கிய பிரமுகர்கள் இலங்கை வருகை இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்க கடல்சார் ஆணையத்தின் முக்கிய பிரமுகர்கள் இலங்கை வருகை

  • September 6, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் கூட்டாட்சி கடல்சார் ஆணையத்தின் (FMC) தலைவர் லாரா டிபெல்லா மற்றும் ஆணையர் ரொபேர்ட் ஜே. ஹார்வி ஆகியோர் இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கின்றனர். அவர்கள் ஐந்து நாள் பயணத்தின் போது, ​​இலங்கையின் மூத்த அரசாங்க மற்றும் கடல்சார் தலைவர்களைச் சந்திக்கவுள்ளனர். “நம்மைச் சுற்றியுள்ள உலகைக் கட்டமைத்தல்” என்ற கருப்பொருளின் கீழ், கொழும்பில் உள்ள ரடிசன் ப்ளூ விடுதியில் செப்ரெம்பர் 9 முதல் 11 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள 8வது கொழும்பு சர்வதேச கடல்சார் மற்றும் தளவாட […]

22 ஐ ஆயுதமாக்கி மக்களை பழிவாங்காதீர்: ஆளுங்கட்சி கோரிக்கை இலங்கை செய்தி

22 ஐ ஆயுதமாக்கி மக்களை பழிவாங்காதீர்: ஆளுங்கட்சி கோரிக்கை

  • September 2, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச் சட்டமூலத்தை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்குவதைத் தவிர்க்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு (GMOA) அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது, “22-ஆவது திருத்தத்திற்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரும் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கினால் என்ன நேரும்?” என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சரவைப் பேச்சாளரும் […]

அமெரிக்கப் படைகள் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, ஜோர்தான், குவைத், ஈராக் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க தளங்கள்மீது ஈரான் பதிலடி தாக்குதல்

  • September 2, 2026
  • 0 Comments

அமெரிக்கப் படைகள் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, ஜோர்தான், குவைத், ஈராக் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. தெற்கு ஈரானின் சிரிக் பகுதியில் திருமணக் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வீடு ஒன்றின் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் விழுந்ததில், குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்ததுடன் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அறிக்கைகள் குறித்துத் தாம் […]

Some missing tourists make contact as Nepal flood death toll tops 1,100 உலகம் செய்தி

நேபாளம் வெள்ள அனர்த்தம்: பலி எண்ணிக்கை 1,118 ஆக உயர்வு

  • September 2, 2026
  • 0 Comments

நேபாளத்தில் குறைந்தது 1,118 பேரைக் பலிகொண்டதும், 3,900-க்கும் மேற்பட்டோரைக் காணாமல் போகச் செய்ததுமான வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், காணாமல் போனதாகப் பதிவான சுற்றுலாப் பயணிகள் சிலர் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதிஏற்பட்ட வெள்ளப் பெருக்கிற்குப் பிறகு, இதுவரை 324 வெளிநாட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 39 நாடுகளைச் சேர்ந்த சுமார் 590 பேர் இன்னமும் காணாமல் போயுள்ளதாகவும் நேபாள வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]