உலகம்

வெனிசுலா நிலநடுக்கம் – 06 நாட்களின் பின் சிறுவன் உயிருடன் மீட்பு

  • July 1, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் ஆறு நாட்களாக சிக்கியிருந்த மூன்று வயது சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். கிளைபர் மோரன் என அடையாளம் காணப்பட்ட அந்தச் சிறுவனை, ஜோர்டானிய மீட்புக் குழுவினர் லா குவைரா மாநிலத்தில் இடிபாடுகளிலிருந்து மீட்டுள்ளனர். குறித்த சிறுவன் தற்போது கராகஸில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதற்கிடையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அவசரமாகத் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் […]

உலகம்

வெனிசுலா நிலநடுக்கம் – 03 அமெரிக்கர்கள் உயிரிழப்பு

  • June 30, 2026
  • 0 Comments

வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களில் சிக்கி  மூன்று அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 12 பேரைக் காணவில்லை எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே நிலநடுக்கங்களின் விளைவாக குறைந்தது 1,750 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸின் (Delcy ⁠Rodriguez) தெரிவித்துள்ளார். வெனிசுவேலாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் கியான்லூகா ராம்போலா (Gianluca Rampolla) இறப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகமாக இருக்கலாம் என்றும், தற்போதுவரை 10000 சடலப் பைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதேநேரம் […]

உலகம்

வெனிசுலா நிலநடுக்கம் – 05 நாட்கள் மீட்பு பணியில் 33 பேர் மீட்பு

  • June 28, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் ஏற்பட்ட   இரட்டை நிலநடுக்கங்களில் சிக்கியவர்களை மீட்கும் பணி இன்று 05 ஆவது நாளாக தொடர்கிறது. தற்போதுவரை இடிபாடுகளில் சிக்கியிருந்த 33 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் பல்லாயிரக்கணக்கானோர்  மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமானவர்களில் பெரும்பாலான குழந்தைகளும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த நிலநடுக்கங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1400 ஐக் கடந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாநிலமான கடலோர லா குவைராவில் வெளிநாட்டு மீட்புக் குழுக்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.    

உலகம்

வெனிசுலா நிலநடுக்கம் – 6.76 மில்லியன் மக்கள் பாதிக்கப்படலாம் எனக் கணிப்பு

  • June 27, 2026
  • 0 Comments

வெனிசுலாவைத் தாக்கிய பேரழிவுகரமான நிலநடுக்கங்களால் 6.76 மில்லியன் மக்கள் வரை பாதிக்கப்படலாம் என்று சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் (IOM) ஆரம்பகட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. மக்கள்தொகை மற்றும் சேதப் பகுப்பாய்வின் அடிப்படையில் இந்த கணிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கணிப்பின் படி கராகஸ் நகரில் மட்டும் 2 மில்லியன் மக்கள் வரை பாதிக்கப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. காட்டியா லா மார் பகுதியில் உள்ள கட்டிடங்களில் 31.5 சதவீதம் சேதமடைந்துள்ளதைக் காட்டும் ஆரம்பகட்ட செயற்கைக்கோள் வரைபடப் பகுப்பாய்வை IOM பெற்றுள்ளது. மக்கள் […]

உலகம்

வெனிசுலா நிலநடுக்கம் – மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

  • June 26, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் நிலநடுக்கதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 250 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், இடிபாடுகளுக்குள் 200 பேர் சிக்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1,520 பேர் காயமடைந்துள்ளதாகவும், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெனிசுலாவில் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலடுக்கங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.