வெனிசுலா நிலநடுக்கம் – 6.76 மில்லியன் மக்கள் பாதிக்கப்படலாம் எனக் கணிப்பு
வெனிசுலாவைத் தாக்கிய பேரழிவுகரமான நிலநடுக்கங்களால் 6.76 மில்லியன் மக்கள் வரை பாதிக்கப்படலாம் என்று சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் (IOM) ஆரம்பகட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
மக்கள்தொகை மற்றும் சேதப் பகுப்பாய்வின் அடிப்படையில் இந்த கணிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கணிப்பின் படி கராகஸ் நகரில் மட்டும் 2 மில்லியன் மக்கள் வரை பாதிக்கப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
காட்டியா லா மார் பகுதியில் உள்ள கட்டிடங்களில் 31.5 சதவீதம் சேதமடைந்துள்ளதைக் காட்டும் ஆரம்பகட்ட செயற்கைக்கோள் வரைபடப் பகுப்பாய்வை IOM பெற்றுள்ளது.
மக்கள் பாதுகாப்பைத் தேடுவதால், இடம்பெயர்வு அதிகரிக்கும் என்பது ஏற்கனவே தெளிவாகத் தெரிகிறது. வரவிருக்கும் கடினமான நாட்களிலும் மாதங்களிலும் வெனிசுலா மக்களுக்கு உயிர் காக்கும் உதவிகளை வழங்கி ஆதரவளிக்க, ஒரு விரைவான நடவடிக்கை அவசியமாகும் என்றும் IOM குறிப்பிட்டுள்ளது.




