வெனிசுலா நிலநடுக்கம் – 06 நாட்களின் சிறுவன் உயிருடன் மீட்பு
வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் ஆறு நாட்களாக சிக்கியிருந்த மூன்று வயது சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளைபர் மோரன் என அடையாளம் காணப்பட்ட அந்தச் சிறுவனை, ஜோர்டானிய மீட்புக் குழுவினர் லா குவைரா மாநிலத்தில் இடிபாடுகளிலிருந்து மீட்டுள்ளனர்.
குறித்த சிறுவன் தற்போது கராகஸில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அவசரமாகத் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.




