வெனிசுலா நிலநடுக்கம் – 03 அமெரிக்கர்கள் உயிரிழப்பு
வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களில் சிக்கி மூன்று அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 12 பேரைக் காணவில்லை எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே நிலநடுக்கங்களின் விளைவாக குறைந்தது 1,750 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸின் (Delcy Rodriguez) தெரிவித்துள்ளார்.
வெனிசுவேலாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் கியான்லூகா ராம்போலா (Gianluca Rampolla) இறப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகமாக இருக்கலாம் என்றும், தற்போதுவரை 10000 சடலப் பைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதேநேரம் நாசாவின் மதிப்பீடுகளின்படி, நிலநடுக்கங்களால் சுமார் 59,000 கட்டிடங்கள் சேதமடைந்ததாக அல்லது அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில பகுதிகளில் மக்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாததால் மீட்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




