ஐரோப்பா செய்தி

பிரித்தானிய தூதரக விருந்தை நிறைவு செய்து புறப்பட்ட மன்னர்

  • April 28, 2026
  • 0 Comments

பிரித்தானிய தூதரகத்தில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்ட  மன்னர் சார்லஸ் (Charles) மற்றும் ராணி கமிலா (Queen Camilla) தற்போது அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்த நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும்  ஓய்வுபெற்ற பிரித்தானிய ஒலிம்பிக் நீச்சல் வீரர் டாம் டேலி உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மிகவும் பரபரப்பான செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக,  இன்றைய அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரல் இதன்மூலம் நிறைவடைந்துள்ளது. மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா (Camilla) […]

ஐரோப்பா செய்தி

மன்னரின் வருகை – வெள்ளை மாளிகையில் அபூர்வ பாதுகாப்பு ஏற்பாடு

  • April 28, 2026
  • 0 Comments

மன்னர் சார்லஸ் (King Charles) வருகையை முன்னிட்டு, வெள்ளை மாளிகை (White House) சுற்றுவட்டாரத்தில் அபூர்வமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாம் இதற்கு முன்பு அரிதாகவே இப்படியான கடுமையான பாதுகாப்பை கண்டுள்ளதாக செய்தியாளர் ஒருவர் கூறினார். வெள்ளை மாளிகைக்கு செல்லும் பென்சில்வேனியா அவென்யூவின் (Pennsylvania Avenue) ஒரு முழுத் தெரு போக்குவரத்திற்காக மூடப்பட்டிருந்தது. அப்பகுதியில் உள்ள அலுவலகங்களுக்கு செல்லும் பணியாளர்களின் அடையாள அட்டைகள் பொலிஸாரால் தீவிரமாகச் சோதிக்கப்பட்டன. இவ்வகை பாதுகாப்பு ஏற்பாடுகள் பொதுவாக மிக உயர்மட்ட […]

செய்தி

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகங்களில் கடும் கட்டுப்பாடு வரலாம்

  • April 28, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகப் பயன்பாட்டில் மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என கல்வித்துறை செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சன் தெரிவித்துள்ளார். எனினும், முழுமையான தடை குறித்து அரசாங்கம் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு பிரபுக்கள் சபையுடன் ஏற்பட்ட விவாதத்திற்குப் பின்னர், 16 வயதுக்குட்பட்டோருக்கு வயது வரம்பு அல்லது பயன்பாட்டு கட்டுப்பாடுகள் கொண்டு வர அரசாங்கம் ஒப்புக்கொண்டது. இந்நிலையில் இதுதொடர்பில் அரசாங்கம் தற்போது ஆலோசனை நடத்தி வருவதாகவும் இந்த கட்டுப்பாடுகள் பயனுள்ளதாகவும் […]

ஐரோப்பா செய்தி

மண்டேல்சன் விவகாரத்தில் அதிக நேரம் வீணாகிறது – அமைச்சர் எம்மா ரெனால்ட்ஸ் 

  • April 27, 2026
  • 0 Comments

மண்டேல்சன் (Mandelson) தொடர்பான சர்ச்சை குறித்து அதிக நேரம் செலவிடப்படுவதாக அமைச்சரவை அமைச்சர் எம்மா ரெனால்ட்ஸ் (Emma Reynolds) தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், மக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவு பிரச்சினைகளுக்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டிய நிலையில், மண்டேல்சனின் விவகாரத்திலேயே கவனம் செலுத்தப்படுவது ஏமாற்றமளிப்பதாக கூறினார். மேலும், மண்டேல்சனின் (Mandelson) தகுதி சரிபார்ப்பு தொடர்பாக பிரதமர் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தவில்லை என்பது கடந்த வாரமே தெளிவாக நிரூபிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். […]

ஐரோப்பா செய்தி

வாஷிங்டன் துப்பாக்கிச் சூடு – மன்னர் சார்லஸின் அமெரிக்க பயணத்திற்கு கூடுதல் பாதுகாப்பு

  • April 26, 2026
  • 0 Comments

வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை செய்தியாளர் இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற சம்பவத்தையடுத்து, மன்னர் மூன்றாம் சார்லஸின் அமெரிக்க அரசுமுறைப் பயணத்திற்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. அரசாங்கம் மற்றும் பக்கிங்ஹாம் அரண்மனை ஆகியவை அமெரிக்க அதிகாரிகளுடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவதாக பிரதமரின் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். அடுத்த வார பயணத்திற்கு முன்பாக பாதுகாப்பு தொடர்பான மேலதிக ஆலோசனைகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை இரவு நடைபெற்ற […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனம் உருவாக வாய்ப்பு

  • April 25, 2026
  • 0 Comments

ஜெர்மன் (Germany) நாட்டைச் சேர்ந்த எரிசக்தி நிறுவனமான E.ON, பிரித்தானியாவில் செயல்படும் தனது போட்டியாளர் ஓவோ எனர்ஜி (Ovo Energy) உடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்தால், பிரித்தானியாவில் 9.5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட பெரிய எரிசக்தி நிறுவனமொன்று உருவாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் E.ON நிறுவனத்துக்கு சுமார் 5.7 மில்லியன் வாடிக்கையாளர்களும், ஓவோ எனர்ஜிக்கு சுமார் 4 மில்லியன் வாடிக்கையாளர்களும் உள்ளனர். ஆனால் இந்த ஒப்பந்தம் இன்னும் […]

ஐரோப்பா செய்தி

நேட்டோ நட்பு நாடுகள் மீது அமெரிக்க அழுத்தம்? பென்டகன் மின்னஞ்சல் சர்ச்சை

  • April 24, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பென்டகனிலிருந்து வெளியானதாகக் கூறப்படும் ஒரு உள் மின்னஞ்சல், தனது நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவு அளிக்காத நட்பு நாடுகளை எதிர்கொள்ள கடுமையான நடவடிக்கைகள் பரிந்துரைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு வெளியான அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த மின்னஞ்சலில், தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஃபாக்லாண்ட்ஸ் தீவுகள் மீதான பிரித்தானியாவின் உரிமையைப் பற்றிய அமெரிக்காவின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தீவுகள் மீது அர்ஜென்டினாவும் உரிமைக் கோரிக்கை வைத்துள்ளது. […]

உலகம் செய்தி

போர் நிறுத்த பேச்சு வார்த்தையால் முடங்கிய பாகிஸ்தான் – பொருள் தட்டுப்பாடு, மக்கள் பெரும் சிரமம்

  • April 24, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத் நகரில் முக்கிய  வீதிகள் ஆறாவது நாளாகவும் மூடப்பட்டுள்ளன. இந்நிலை எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து இதுவரை எந்த உத்தியோகபூர்வ தகவலும் வெளியாகவில்லை. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்த நகரம் தயாராகி வருவதாக கூறப்பட்டாலும், இரு தரப்பினரும் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு இதுவரை அனுமதி அளிக்கவில்லை. வீதிகள் மூடப்பட்டதால் கனரக சரக்கு வாகனங்கள் நகருக்குள் நுழைய முடியாமல் போயுள்ளது. இதனால் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட புதிய விளைபொருட்களின் விநியோகம் […]

உலகம் செய்தி

ஹோர்முஸில் அமெரிக்காவின் அனுமதி இன்றி எந்தக் கப்பலும் செல்ல முடியாது – ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

  • April 23, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் அரசியல் நிலை குறித்து கடுமையான கருத்துகளை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரானியர்களுக்கு தங்கள் தலைவர் யார் என்பதே தெரியவில்லை” என அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் கடும்போக்காளர்களுக்கும் மிதவாதிகளுக்கும் இடையில் கடும் உட்கட்சிப் போட்டி நடைபெறுவதாகவும் அவர் கூறினார். மேலும், ஹோர்முஸ் நீரிணை மீது அமெரிக்காவுக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதாகவும், அமெரிக்காவின் அனுமதி இல்லாமல் எந்தக் கப்பலும் அங்கு செல்ல முடியாது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த […]

ஐரோப்பா செய்தி

கடும் கட்டுப்பாடு – பிரித்தானியாவில் புகைப்பழக்கமற்ற தலைமுறை சட்டம் நிறைவேற்றம்

  • April 21, 2026
  • 0 Comments

புகையிலை மற்றும் வேப் தொடர்பான புதிய மசோதா பிரித்தானிய பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் 17 வயது மற்றும் அதற்கு குறைந்த வயதுடையவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாத நிலை உருவாகிறது. 2009 ஜனவரி 1க்கு பிறகு பிறந்தவர்கள் புகைப்பிடிப்பு பழக்கத்தை தொடங்குவதைத் தடுக்கும் நோக்கில் இந்த புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது “புகைப்பழக்கமற்ற தலைமுறை” உருவாக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. சட்டம் அமலுக்கு வந்தால், புகையிலை, வேப்பிங் மற்றும் நிகோடின் பொருட்கள் தொடர்பான விதிமுறைகளை மேலும் […]