ஹோர்முஸில் அமெரிக்காவின் அனுமதி இன்றி எந்தக் கப்பலும் செல்ல முடியாது – ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் அரசியல் நிலை குறித்து கடுமையான கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரானியர்களுக்கு தங்கள் தலைவர் யார் என்பதே தெரியவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடும்போக்காளர்களுக்கும் மிதவாதிகளுக்கும் இடையில் கடும் உட்கட்சிப் போட்டி நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், ஹோர்முஸ் நீரிணை மீது அமெரிக்காவுக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதாகவும், அமெரிக்காவின் அனுமதி இல்லாமல் எந்தக் கப்பலும் அங்கு செல்ல முடியாது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துகள், கடற்படைக்கு உத்தரவு வழங்கியதாக கூறிய சில நிமிடங்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்டுள்ளன.





