ஐரோப்பா செய்தி

வாஷிங்டன் துப்பாக்கிச் சூடு – மன்னர் சார்லஸின் அமெரிக்க பயணத்திற்கு கூடுதல் பாதுகாப்பு

வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை செய்தியாளர் இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற சம்பவத்தையடுத்து, மன்னர் மூன்றாம் சார்லஸின் அமெரிக்க அரசுமுறைப் பயணத்திற்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.

அரசாங்கம் மற்றும் பக்கிங்ஹாம் அரண்மனை ஆகியவை அமெரிக்க அதிகாரிகளுடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவதாக பிரதமரின் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அடுத்த வார பயணத்திற்கு முன்பாக பாதுகாப்பு தொடர்பான மேலதிக ஆலோசனைகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை இரவு நடைபெற்ற அந்த நிகழ்வில், பாதுகாப்பு சோதனைச் சாவடியை மீறி ஒருவர் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் வெளியேற்றப்பட்டனர்.

இதனிடையே நிழல் உள்துறைச் செயலாளர் கிறிஸ் பிலிப், மன்னரின் பாதுகாப்பு மிக முக்கியம் என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மீண்டும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை இராஜதந்திர உறவுகளும் அரசியல் நடவடிக்கைகளும் வன்முறையால் பாதிக்கப்படக் கூடாது என்பதால், திட்டமிட்டபடி இந்த அரசுமுறைப் பயணம் நடைபெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி